நீங்க என்ன ஆங்சாங்சூகியா? அன்னை தெரசாவா?ன்னு ஜெ,விடம் ஏன் கேட்கவில்லை... சீறிய சீமான்
சென்னை: மன்னார்குடி இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து இறந்ததற்கு தம்முடைய மேடை பேச்சுகள் காரணம் அல்ல என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மறுத்துள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று முன்தினம் காவிரி நதிநீர் உரிமை மீட்பு பேரணியை நடத்தினர். அப்போது மன்னார்குடியை சேர்ந்த இளைஞர் விக்னேஷ், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் காவிரி நதிநீர் உரிமையை மீட்க வலியுறுத்தியும் தீக்குளித்து இறந்தார்.

கர்நாடகாவில் கேட்க முடியுமா?
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது:
கர்நாடகாவில் அப்பாவித் தமிழர்கள் மீது வன்முறையை ஏவிவிடுகிறீர்களே? நியாயமான என அங்கே போய் பத்திரிகையாளர்கள் கேட்டுவிட முடியுமா? நாங்க யாரும் தீக்குளித்து சாக வேண்டும் என்று சொல்லவில்லை.

உணர்வெழுச்சிதான்..
எதை ஒன்றையும் இழக்காமல் பிறிதொன்றை அடைய முடியாது. அனைவரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்றா நாங்கள் வழிநடத்துகிறோம்?. தீக்குளிப்பு என்பது உணர்வெழுச்சியால் நிகழ்கிற ஒன்று...

ஜெ.வுக்காக ஏன் இறந்தார்கள்?
எந்த ஒருவரது முறுக்கேற்றும் பேச்சால் தீக்குளிப்பு நிகழ்வதில்லை. அப்படியானால் ஊழல் வழக்கில் சிறைக்கு போன ஜெயலலிதாவுக்காக 100 தமிழர் தற்கொலை செய்து கொண்டார்களே? அம்மையார் ஜெயலலிதா என்ன முறுக்கேற்றுவது போல் தற்கொலை செய்து கொள்ளுவது போல் பேசினார்?

ஜெ.விடம் கேட்க முடியுமா?
ஜெயலலிதாவிடம் போய் நீங்க என்ன ஆங்சாங் சூகியா? அன்னிபெசன்ட் அம்மையாரா? அன்னை தெரசாவா? உங்களுக்காக தற்கொலை செய்து கொண்டார்களே ஏன் என உங்களால் கேட்க முடியுமா?
இவ்வாறு சீமான் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications