தமிழக அரசியலுக்கு ரஜினி தேவையில்லை.. சீமான் பொளேர் !
தமிழக மக்கள் பிரச்சனையை தீர்க்க நாங்கள் இருக்கிறோம். எனவே தமிழக அரசியலுக்கு ரஜினி தேவை இல்லை என்று சீமான் கூறியுள்ளார்.
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தேவையில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த ரஜினி தனது கடைசி நாள் உரையில் பேசியது அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இதனை கடுமையாக சீமான் எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாள் விழாவையொட்டி, திருச்சியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர தேவையில்லை என்றும், அவர் வந்தால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தாங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
தான் பச்சை தமிழன் என்று நடிகர் ரஜினி கூறும் நிலையில், மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகள் தாங்கள் இருந்தால் மராத்தியராகி விட முடியுமா? என சீமான் கேள்வி எழுப்பினார். வெள்ளையர்கள் நூறு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி புரிந்ததால், அவர்கள் தமிழர்கள் ஆகி விட முடியாது எனவும் சீமான் குறிப்பிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications