மாணவி அனிதா தற்கொலை செய்யவில்லை... கொலை செய்யப்பட்டுள்ளார் - சீமான் கொதிப்பு
மாணவி அனிதா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: ஒவ்வொரு உரிமைக்கும் ஒவ்வொருவர் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய உள்ளது என சீமான் கோபத்தோடு கூறினார்.
அரியலூர் மாவட்டம் குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

மாணவி அனிதா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார். சிபிஎஸ்இ படிப்பவர்கள் தான் மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு உரிமைக்கும் ஒவ்வொருவர் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய உள்ளது என்று சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications