இலங்கை வடக்கு மாகாணத்தில் நாளை பொது வேலை நிறுத்தம்.. அனைவரும் பங்கேற்க சீமான் அழைப்பு
சென்னை: இலங்கையில் சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2009 போருக்கு பின்னாலான ஈழத்தமிழர்களின் துயர் நிலை இன்றளவும் நீங்காத பெரும் சோகமாய் நீடிக்கிறது. இன்றளவும் போரில் பங்கு பெறாத தமிழினத்தைச் சேர்ந்த அரசியல் கைதிகள் இலங்கைச்சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிற துயர் நிலை இலங்கை அரசு பன்னாட்டுச் சமூகத்திடம் காட்டுகிற அமைதி, புனர் வாழ்வு, மீள் கட்டமைப்பு ஆகிய சமாதான முகங்களுக்கு எதிராக இருக்கிறது.
இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழின அரசியல் கைதிகள் தங்கள் விடுதலைக்காகச் சாகும் வரையிலான உண்ணாநிலை உள்ளிட்ட பல போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதை மாந்த நேயம் பேசும் உலகச் சமூகத்தின் முன் சுட்டிக்காட்ட எம் மக்கள் தயாராகி விட்டனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டின் போருக்குப் பின் பன்னாட்டுச் சமூகத்தின் பல்வேறு அழுத்தங்களுக்குப் பின் போரின் போது கைது செய்யப்பட்ட 12,000 போராளிகளை விடுதலை செய்து புனர்வாழ்வு அளித்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிங்கள அரசு இன்னும் 270 தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்று அதுவே முன்வந்து அறிவித்து இருப்பது எவ்வகையான நீதி என்பதைப் பன்னாட்டுச் சமூகம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
போரினில் ஈடுபடாத,போருக்கு தொடர்பில்லாத தமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிற சிங்கள அரசின் கொடும் போக்குக் குறித்துப் பன்னாட்டுச் சமூகமும், ஐநா மன்றமும் கவனம் கொள்ள வருகிற 13-11-2015 வெள்ளிக்கிழமை அன்று வடமாகாணம் தழுவிய பொதுவேலை நிறுத்தம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
தமிழின ஒற்றுமையில் தான் நம் துயர் இருட்டை நீக்க வல்ல பேரொளி ஒளிந்திருக்கிறது என்கிற மாபெரும் உண்மையை உணர்ந்து, இலங்கைச்சிறையில் வதைப்பட்டு வருகிற தமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி 13-11-2015 வெள்ளிக்கிழமை அன்று வடமாகாணம் தழுவிய அளவில் நடக்க இருக்கும் பொது வேலை நிறுத்தத்தில் எம்மின உறவுகள் தாங்களாகவே முன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று நான் அன்போடும்,உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழின அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி 13-11-2015 வெள்ளிக்கிழமை அன்று வடமாகாணம் தழுவிய அளவில் நடக்க இருக்கும் பொதுவேலைநிறுத்தம் வெற்றிப் பெற நாம் தமிழர் கட்சி சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications