For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேகர் ரெட்டியிடம் சிக்கிய பணம், தங்கம் 5 மூத்த அமைச்சர்களுக்கு சொந்தம்- பரபர தகவல்!

கான்டிராக்டர் சேகர் ரெட்டியிடம் சிக்கிய பணம், தங்கம் 5 மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. சேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய சிடியில்தான் இந்த ஆதாரங்கள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ற

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: சேகர் ரெட்டியிடம் சிக்கிய ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கம் தமிழகத்தின் 5 மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமானது என பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சேகர் ரெட்டி... தமிழக அரசின் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளை செய்து வருபவர். போயஸ் கார்டன் உட்பட அதிகார மையங்களின் பிரதான 'நிழல்'.

அள்ள அள்ள பணம்...

அள்ள அள்ள பணம்...

இத்தகைய 'சக்தி' வாய்ந்த சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இச்சோதனையில் தோண்ட தோண்ட தங்கம்... அள்ள அள்ள பணம்... அத்தனையும் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் என அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கிடைத்தது.

130 கிலோ தங்கம்

130 கிலோ தங்கம்

மொத்தம் ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்க கட்டிகள் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ரிசர்வ் வங்கியில் இருந்தே புத்தம் புதிய ரூ2,000 நோட்டுகள் செகர் ரெட்டிக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதும் அம்பலமானது.

அதிர்ச்சி சிடி

அதிர்ச்சி சிடி

இந்த சோதனையில் மிக முக்கியமான சிடி ஆதாரம் ஒன்றும் வருமான வரித்துறை வசம் இருக்கிறதாம். அதில் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் அதிகார மையம் மற்றும் 5 மிக மூத்த அமைச்சர்களுக்கு சொந்தமானதே பிடிபட்ட பணமும் தங்கமும் என்ற விவரம் அடங்கியுள்ளதாம்.

ஆட்டம் இனிதானாம்

ஆட்டம் இனிதானாம்

சிக்கிய சிடியில் உள்ள விவரங்கள் அப்படியே டெல்லி மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டதாம். இந்த சிடி விவகாரத்தை முன்வைத்தே தமிழக விவகாரங்களை தம் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்துக் கொள்வதில் டெல்லியும் மும்முரமாக இருக்கிறதாம்.

English summary
Sources said that IT officials traced the links with Sekhar reddy and five Tamilnadu Senior Ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X