செல்பி எடுத்தபோது விபரீதம்... கொடைக்கானலில் 2000 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் பலி
மதுரை: கொடைக்கானலில் செல்பி எடுத்த போது, எதிர்பாராதவிதமாக 2 ஆயிரம் அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞரின் உடலைப் போலீசார் மீட்டுள்ளனர்.
மதுரை பி.பி.குளத்தை சேர்ந்த கார்த்திக் (25) என்ற இளைஞர், தனது நண்பர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பகல் முழுவதும் பூங்கா, ஏரி, பைன்பாரஸ்ட், குணாகுகை, நீர்வீழ்ச்சி என பல்வேறு இடங்களை இவர்கள் சுற்றுப் பார்த்துள்ளனர்.

இரவில் டால்பின்னோஸ் செல்லும் வழியில் உள்ள மவுன்டைன்பியூட்டி என்ற இடத்துக்கு நண்பர்கள் சென்றுள்ளனர். உயரமான மலை முகடுகளை கொண்ட அந்த அழகிய இடம் தங்கள் செல்போனில் போட்டோக்களாக அவர்கள் எடுத்துள்ளனர்.
அப்போது உயரமான பாறை ஒன்றின் மீது ஏறி நின்று செல்பி எடுத்துள்ளார் கார்த்திக். ஆனால், எதிர்பாராதவிதமாக கால் வழுக்கியதில் அவர் சுமர 2 ஆயிரம் அடி ஆழமான பள்ளத்தில் தவறி விழுந்தார்.
இதனை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் நண்பர்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இரவு நேரம் என்பதால், பள்ளத்திற்குள் இறங்கி கார்த்திக்கை தேட இயலவில்லை. அதனைத் தொடர்ந்து இன்று தீயணைப்பு வீரர்கள் அந்த பள்ளத்தாக்கில் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே தகவல் அறிந்து கார்த்திக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடைக்கானலுக்கு வந்தனர். அவர்கள் கார்த்திக்கை உயிருடன் மீட்க வேண்டும் என்று கண்ணீர் மல்க போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து தனியார் மீட்பு குழுவினர் உதவியுடன் அவரை தேடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 10 பேர் கொண்ட மீட்பு குழுவினர் மலையின் அடிப்பகுதியில் உள்ள வெள்ளக்கவி என்ற கிராமத்திற்கு நேற்று காலை சென்றனர். பின்னர் அங்கிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலைப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள பாறை ஒன்றில் ரத்தக்கறையுடன் கார்த்திக் உடல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருடைய உடலை மீட்ட அவர்கள் டோலி கட்டி வெள்ளக்கவி கிராமத்திற்கு கொண்டு வருவதற்குள் இரவு நேரம் ஆகி விட்டது. மேலும் கொடைக்கானலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் அவருடைய உடலை கொண்டு வர முடியவில்லை.
இதனால் மீட்பு குழுவினர் பிணத்துடன் அந்த கிராமத்திலேயே தங்கினர். இதையடுத்து அவருடைய உடல் இன்று கொடைக்கானலுக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கார்த்திக்கின் உடல் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது.
சம்பவம் நடந்தபோது, கார்த்திக்கும், அவரது நண்பர்களும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
மலைச் சிகரங்கள், ரயில் தண்டவாளங்கள், அருவிகள் போன்ற ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க வேண்டாம் என எவ்வளவோ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டாலும், சிலர் ஆர்வக்கோளாறினால் செய்யும் இத்தகைய வேலைகள் சமயங்களில் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடுகின்றன.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications