அம்மா கேன்டீனில் மாட்டுக்கறி பிரியாணி வழங்க வேண்டும்: கலெக்டருக்கு வந்த கோரிக்கை மனு
Subscribe to Oneindia Tamil
கோவை: அம்மா உணவகத்தில் மாட்டிறைச்சி பிரியாணி வழங்கப்பட வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிடம், மாட்டிறைச்சி சாப்பிடுவோர் நல சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இம்மனுவை கலெக்டரிடம் அளித்த சங்க தலைவர் முனுசாமி நிருபர்களிடம் கூறியது: மாட்டிறைச்சி ஒரு நல்ல சத்துமிக்க உணவாகும். ஆனால், அதை சாப்பிடுவது அரசியலாக்கப்படுகிறது.

தமிழகத்தில் மாட்டிறைச்சி குறைந்த விலையில் கிடைக்க வழி செய்யப்பட வேண்டும். அம்மா கேன்டீன்களில், மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட வேண்டும். மாடுகளை ஏற்றிச் செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபடுவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications