“கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளன”.. சொன்னது செல்லூர் ராஜு!
மதுரை: “திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளன. திமுக எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது.. மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். 2011ல் நடந்ததுதான் இப்போதும் நடக்கப்போகிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஒரிரு சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடுகிறது. இதனை தமிழகத்தின் விலைவாசி உயர்வுடன் ஒப்பிட வேண்டாம். அதிமுக ஆட்சியில் வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளன. கூட்டணி என்பது தேர்தல் நேரத்திற்குத் தான். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், திமுக ஆட்சியில் நிலவும் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
இந்தியாவிலேயே தலித்கள், பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் தமிழ்நாடு என்ற புள்ளி விவரம் வருகிறது. இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். திமுக கூட்டணியில் கட்சிகள் பவ்யமாக இருக்கின்றன. கம்யூனிஸ்ட்கள் ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுக்காமல் சீட் வாங்கிவிடத்தான் நினைக்கிறார்கள்.
2026 ல் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது. 2011ல் நடந்தது போலத்தான் இப்போதும் நடக்கப்போகிறது. ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்பதை முதலமைச்சர் யாரிடம் கேட்டார்? சாதாரண மக்களை சந்தித்து பேசினால் மட்டுமே மக்கள் பிரச்சனை தெரியவரும். சாதனைகளை சொல்லிச் சொல்லி ஓட்டு கேளுங்கள்.. ரியல் ஹீரோ எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார்.” என்றார்.
தவெக குறித்தும், விஜய் குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மற்றொரு நாள் பேசலாம் எனத் தெரிவித்து விட்டுக் கிளம்பினார் செல்லூர் ராஜூ. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக கூட்டணியை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார் முன்னாள அமிச்சர் செல்லூர் ராஜு.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications