என்ன ராஜு சார் இப்பப் போய் இப்படிப் பேசலாமா?
கருணாநிதியின் உடல்நிலை குறித்து கட்சி வேறுபாடின்றி அனைவரும் கவலை கொண்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: கருணாநிதியின் உடல்நிலை நலம் பெற வேண்டி கட்சி மாச்சரியங்களுக்கு அப்பால் பிரார்த்தனை செய்து வரும் நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கட்சி வேறுபாடின்றி ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் சென்று அவரது உடல்நலத்தை விசாரித்து வருகின்றனர்.

தெர்மாக்கோல் ராஜூ
கருணாநிதியின் உடல்நிலை குறித்து செல்லூர் ராஜூ கூறுகையில் 2021-ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை பார்த்து கருணாநிதி வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த பேச்சுதான் சர்ச்சையாகியுள்ளது.

முதுபெரும் மனிதர்
கருணாநிதி முதுபெரும் அரசியல்வாதி என்பதை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல், வைகை ஆற்றில் தெர்மாக்கோல் விடுவதை போன்று தேவையற்ற வார்த்தைகளை விட்டுள்ளார் செல்லூர் ராஜூ.

மனிதன் உயிரில் அரசியல்
எத்தனை பெரிய மனிதர்களென்றாலும் நாவடக்கம் தேவை. ஒரு மனிதனின் உயிரில் அரசியல் செய்வது என்பது கூடவே கூடாது. ஜெயலலிதா இறந்த போது தமிழகத்தை ஆள வேண்டாம் என்று தானே சொன்னோம், அவர் வாழ வேண்டாம் என்று சொல்லவில்லையே என்றுதான் திமுகவின் மூத்த நிர்வாகிகளான துரைமுருகன் உள்ளிட்டோர் கூறினர்.

கண்டிக்க வேண்டும்
அதிமுக அமைச்சர்களான உதயகுமார், விஜயபாஸ்கர், அதிமுக எம்பி தம்பிதுரை உள்ளிட்டோர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என்று கூறியதோடு அவர் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்தனர். ஆனால் செல்லூர் ராஜூவோ தனது பதவிக்கு சற்றும் பொருத்தம் இல்லாத வார்த்தைகளை கூறுவது சரிதானா.
இனிமேலாவது கொஞ்சம் பார்த்துப் பேசுங்க செல்லூர் ராஜூ சார்!
-
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும்












Click it and Unblock the Notifications