தெர்மாக்கோல் விஞ்ஞானி அண்ணன் செல்லூராரும் டுவிட்டரில் வந்துட்டாருல்ல!.. ஆர்மியினர் மகிழ்ச்சி
அமைச்சர் செல்லூர் ராஜூவும் டுவிட்டர் பக்கத்தில் இணைந்தார்.
Recommended Video

சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும் டுவிட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களை தொடங்கியுள்ளனர். இது வெளிநாடு அல்லது பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாத நேரங்களில் ஒரு டுவீட் போட்டால் போடும் அது செல்பவர்களுக்கு சரியாக சென்று சேர்ந்துவிடும்.
அதன் மூலம் மிகவும் புகழ்பெற்றவர் கமல்ஹாசன். இவருக்கும் தமிழக அரசுக்குமான மோதலின்போது இவர் எந்த நேரத்தில் சர்ச்சைக்குரிய டுவீட்டை போடுவாறே காத்திருந்த காலமும் உண்டு.

பிரபலங்கள்
இதுபோல் டுவிட்டர் கணக்கை நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் மட்டுமல்லாது பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட பிரபல நடிகர், நடிகைகளும் டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளனர்.

புதிய கணக்கு
இதன் மூலம் அரசு சம்பந்தப்பட்ட அறிக்கைகள், அறிவிப்புகளையும், குறிப்பிட்ட சம்பவத்துக்கு தங்கள் எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் செல்லூர் ராஜூவும் டுவிட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.

ஆசை
இதனால் செல்லூராருக்கென ஆர்மி தொடங்கியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அண்ணன் செல்லூரார் நிறைய ஆராய்ச்சிகளை செய்து தமிழகம் முன்னேற பல்வேறு ஐடியாக்களை டுவிட்டர் மூலம் வழங்கவேண்டும் என்பதே அவர்களின் ஆசையாகும்.

மீம்ஸ்கள்
என்னண்ணே அடுத்து பேஸ்புக்தானே... வரலாம் வா வரலாம் வா... வாங்கண்ணே! என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர் அண்ணனின் அடிவிழுதுகள். இனி அண்ணனை தொடர்பு கொள்ள www.twitter.com/SellurKRajuoffl என்ற முகவரியை அணுகவும். இவர் எதை சொன்னாலும் அதை வைத்து மீம்ஸ்களை போடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications