சென்னை பல்கலைக்கழக நிதியில் முறைகேடு.. விசாரணை கோரும் செனட் உறுப்பினர்கள்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் நிதியில் பெருமளவில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன் அனுமதி இல்லாமல் பல்கலைக்கழக நிதி, திட்டமிடப்படாத செலவீனத்திற்கு திருப்பி விடப்படுவதாகவும் செனட் உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக செனட் கமிட்டியில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பலக்லைக்கழக நிதி முறைகேடாகச் செலவிடப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கடந்த 6 ஆண்டுகளில் பெருமளவில் மோசடி நடந்துள்ளது. இதில் நானோ அறிவியல் துறைக்கான பணம் ரூ. 16 கோடியையும் திருப்பி விட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டது.
பேராசிரியர் ஆர். தாண்டவன் மற்றும் பேராசிரியர் திருவாசகம் ஆகியோர் துணை வேந்தர்களாக இருந்த சமயத்தில் இந்த முறேகேடுகள் நடந்துள்ளன என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு ரூ. 100 கோடி மதிப்பீட்டில் நானோ அறிவியல் துறையை நிர்மாணிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு அது தொடங்கப்பட்டது. ஆனால் அதன் நிதியையைும் திட்டமிடப்படாத செலவுகளுக்குத் திருப்பி விட்டு முறைகேடு செய்துள்ளனர்.
இது குறித்த புகாரை முதலில் எழுப்பியவர் செனட் உறுப்பினர் சுந்தரம் ஆவார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "இதுபோன்ற நிதி மாற்றம் முன் அனுமதி பெறப்படாமல் நடந்துள்ளது. இது தவறானது. இதில் பெரும் முறைகேடு செய்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளில் நடந்த நிதிப் பரிமாற்றம், செலவுகள் குறித்து விரிவான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிறார் சுந்தரம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications