திருமாவளவனைத் தோற்கடிக்க சிதம்பரத்திற்கே 'ஷிப்ட்' ஆன செங்கோட்டையன்!
சிதம்பரம்: திமுக சார்பில் சிதம்பரம் தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக தீவிர பிரசாரப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக முன்னாள் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் சிதம்பரத்திற்கு வந்து தங்கி விட்டார்.
அங்கு அவர் வாடகைக்கு வீடு பிடித்துத் தங்கி தேர்தல் பணிகளை முடுக்கி விட்டு வருகிறாராம். இதனால் அதிமுகவினரும் உற்சாகமாக இறங்கியுள்ளனர்.

சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார் செங்கோட்டையன். இதையடுத்து அவருக்காக ஒரு தனி வீடு பார்க்கப்பட்டது. அந்த வீட்டில்தான் தற்போது செங்கோட்டையன் தங்கி தேர்தல் பணிகளைக் கவனிக்க ஆரம்பித்துள்ளார்.
மேலப் புதுத் தெருவில் இந்த வீடு உள்ளது. இங்கு செங்கோட்டையன் தலைமையில் அதிமுகவினர் படு சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்ய ஆரம்பித்துள்ளனர். அதிமுகவினர், கூட்டணிக் கட்சிகளுடன் தினசரி ஆலோசனை, திட்டமிடல், பிரசார உத்திகள் என படு பிசியாக இருக்கிறாராம் செங்கோட்டையன்.
வெற்றிக்கனியைப் பறித்து, அம்மா கையில் கொடுத்து மீண்டும் அமைச்சர் பதவியை வாங்கி விட வேண்டும் என்ற உத்வேகத்தில் செங்கோட்டையன் இருப்பதாக கூறுகிறார்கள்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications