அதிமுக மூத்த தலைவர்கள் நெருக்கடி- எந்த நேரத்திலும் முதல்வர் ஓபிஎஸ் ராஜினாமா?
முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலைவர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் அவர் எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யக் கூடும் என தெரிகிறது.
சென்னை: தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் எந்த நேரத்திலும் நீக்கப்படும் அல்லது ராஜினாமா செய்யும் நிலைமை உருவாகியுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என அதிமுக மூத்த தலைவர்கள் பலரும் பகிரங்கமாக வலியுறுத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவின் போது முதல்வராக சசிகலா முயற்சித்தார். ஆனால் மத்திய பாஜக அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.
இதனைத் தொடர்ந்து மத்திய பாஜக அரசுடனான சமாதான நடவடிக்கைகளை சசிகலா தரப்பு மும்முரமாக மேற்கொண்டது. இதன் விளைவாக சசிகலா, அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். அவரும் பொதுச்செயலர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

சசிக்கு ஆதரவு குரல்
இதன்பின்னர் சசிகலாவே முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் என அமைச்சர் உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். தற்போது அதிமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த கோரிக்கையை வலியுறுத்துகின்றனர்.

போர்க்கொடி
லோக்சபா துணை சபாநாயகரும் அதிமுக கொள்கை பரப்பு செயலருமான தம்பிதுரை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கட்சியும் ஆட்சித் தலைமையும் இருவரிடத்தில் இருப்பது சரியல்ல என கூறி பன்னீர்செல்வத்துக்கு எதிராக பகிரங்கமாக போர்க்கொடி தூக்கினார்.

எந்த நேரத்திலும் ராஜினாமா
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோரும் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். தமக்கான நெருக்கடி அதிகரித்து வருவதால் எந்த நேரத்திலும் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூடும் என்றே தெரிகிறது.

திருமங்கலத்தில் போட்டி
அத்துடன் சசிகலாவுக்காக அமைச்சர் உதயகுமார் ராஜினாமா செய்வார்; இதைத் தொடர்ந்து உதயகுமாரின் திருமங்கலம் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சிவகுமார் சிவபெருமான் ஆன கதை.. அப்ப தான் பதவியேற்றார், அதுக்குள்ள கெட்டப்பால் கொந்தளிக்குது கர்நாடகா -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications