கிணற்றில் மிதந்த வயதான தம்பதியின் உடல்கள்... அதிர்ச்சி வீடியோ
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் வயதான தம்பதிகளின் உடல் கிணற்றில் மிதந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அது கொலையா அல்லது தற்கொலையா என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள முத்துபட்டியில் வயதான தம்பதிகள் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியைச் சேர்ந்த முத்தையா ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் தன் மனைவி வாசுகியுடன் முத்துப்பட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர்கள் இருவரின் உடல் வீட்டின் அருகேயிருந்த கிணற்றில் பிணமாக மிதந்துள்ளது.

இதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனையடுத்து அங்கு வந்த போலீசார், உடனே உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனியாக வசித்து வந்த தம்பதியினர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளையில் முத்தையாவின் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் துப்பு துலக்குவதில் போலீசார் திணறி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மிக அதிக அளவில் கொலை, கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தமிழக அரசு சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தக் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications