கடவுளும் கண்ணீர் சிந்துவார் இந்த முதியவர்களின் நிலையைப் பார்த்தால்!
சேலம்: சேலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியவர் ஒருவர் மனித கழிவுகளை வெறும் கைகளால் சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
சேலம் அன்னதானப்பட்டியில் மாநகராட்சி உதவியோடு கலைவாணி என்பவர் முதியோர் இல்லத்தை நடத்தி வருகிறார். இதில் 35 முதியவர்கள் பராமரிக்கப்படுகின்றனர்.
இந்த இல்லத்தில் முதியவர்களுக்கு கொடூரங்கள் நடப்பதாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

தண்ணீர் தொட்டி
அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் மனிதக் கழிவுகளை அள்ளுவதற்கு வற்புறுத்தப்படுகிறார். அதுபோல் மூதாட்டி ஒருவர் தண்ணீர் தொட்டியில் இறக்கப்பட்டு சுத்தம் செய்ய வைக்கப்படுகிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்
இதை பார்ப்போர் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த இல்லத்தின் உரிமையாளர் கலைவாணியிடம் கேட்டபோது கழிவை சுத்தம் செய்த முதியவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால்தான் அவர் அதுபோல் செய்கிறார்.

மக்கள் கோரிக்கை
என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற புகார்களை எழுப்புவதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற முதியவர் இல்லங்களை தமிழக அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் முறைப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.

பரபரப்பு
மனித கழிவுகளை மனிதனே அள்ளும் கொடுமை அகல வேண்டும் என்றும் கழிவுநீர் துளைகளில் துப்புரவு ஊழியர்கள் தங்கள் கைகளால் சுத்தம் செய்ய வைக்கக் கூடாது என்றும் தற்போது கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் முதியவர் இல்லத்தில் அதுவும் ஆதரவற்றவர் என்றும் பாராமல் அவரை மனிதக் கழிவுகளை அள்ள வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications