நடிகையுடனான நள்ளிரவு சண்டையை கள்ளக் காதலாக கதை கட்டியதால் மன உளைச்சல்- சுகுமாறன்
நள்ளிரவில் சீரியல் நடிகையுடன் மோதலில் ஈடுபட்டதை தவறாக சித்தரிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளர் சுகுமாறன் கூறியுள்ளார்.
சென்னை : காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கும் நடிகை சபீதாவிற்கும் இடையேயான மோதலை தவறாக சித்தரித்து வெளியிட்டதால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளர் சுகுமாறன் கூறியுள்ளார்.
சென்னை ஆழ்வார் திருநகரில் வசித்து வரும் சுகுமாறன் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்தார். நாடகத் தொடர்களுக்கு இடம் தேர்வு செய்து கொடுக்கும் பொறுப்பை கவனித்து வரும் இவர் நடிகை சபீதாவிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில், கடந்த 27ம் தேதி வெளியூர் செல்ல இருந்த நிலையில் அவரது வீட்டிற்கு நடிகை சபீதா நள்ளிரவில் வந்து கடனை திருப்பிக் கேட்டுள்ளார்.
இதில் சபீதாவிற்கும் சுகுமாறனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பும் ஆகிவிட்டது. இதனை தனது செல்போனில் படமெடுத்த அதே அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் நபர் ஒருவர் வீடியோ காட்சிகளை மாற்றி சித்தரித்து தங்கள் இருவருக்கும் தகாத உறவு இருப்பதாக கதைகட்டி விட்டதாக சுகுமாறன் கூறியுள்ளார்.

பணம்தான் பிரச்சனை
உண்மையிலேயே தனக்கும் சபீதாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தாம் தர வேண்டிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்க முடியாமல் போனதால் என் வீட்டு வாசலில் நின்று சபீதா சண்டையிட்டதாகவும் சுகுமாறன் தெரிவித்துள்ளார். தான் வெளியூர் சென்றுவிட்டு வந்து பணத்தை திருப்பித் தருவதாகக் கூறியும் சபீதா ஏற்காமல் கடுமையான வார்த்தைககளால் திட்டியதாலேயே கைகலப்பு ஏற்பட்டதாகவும் சுகுமாறன் விளக்கமளித்துள்ளார்.

20 ஆண்டு திரை அனுபவம்
கிழக்குச் சீமையிலே படம் முதல் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வரை ஏராளமான படங்களுக்கு ஷுட்டிங் ஸ்பாட் தேர்வு செய்யும் பணியில் இருந்து வந்துள்ளார். முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் 20 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ள சுகுமாறன் தான் பெண்களை எப்போதும் தவறான கண்ணோட்டத்தில் பார்தததே இல்லை என்று தமிழ் ஒன் இந்தியாவிடம் தெரிவித்தார்.

தற்கொலை முடிவு
ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் மற்றொரு நபருடன் ஏற்பட்ட விரோதம் காரணமாக அந்த நபர் சண்டையை வீடியோ படம் எடுத்து தவறான தகவலை பரப்பிவிட்டதாக விளக்கமளித்துள்ளார் சுகுமாறன். இந்த வீடியோ காட்சி வெளியானதால் தமக்கு வேலையும் பறிபோய்விட்டதால் மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டு 110 தூக்க மாத்திரைகளுடன் சுற்றியதாகக் கூறுகிறார் சுகுமாறன்.

சட்டப்படி நடவடிக்கை
ஆனால் தன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அளித்த உறுதியால் மனதை தேற்றிக் கொண்டு தற்போது கேரள மாநிலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளாராம் சுகுமாறன். இரண்டு தினங்களில் சென்னை திரும்பியது தவறான தகவலை பரவவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகுமாறன் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications