தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்
ஆலப்புழை, பத்தினம் திட்டா மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்காகவும், விவசாயத் தேவைக்காகவும் தென் மலை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை: தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் தென்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக - கேரளா எல்லை ஆரியங்காவு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கல்லடா ஆற்றில் அமைந்துள்ள தென்மலையில் கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழை, பத்தினம்திட்டா ஆகிய 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு தேவையான குடிநீர், விவசாயத்திருக்கு பயன்படும் தண்ணீரை கருத்தில் கொண்டு 24 கிமீ தூரம், 2 கிமீ அகலத்தில் 115 மீட்டர் உயரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைகளை மையமாக வைத்து கல்லடா ஆற்றின் குறுக்கே தென்மலை நீர்தேக்கம் அமைக்கப்பட்டது.

இந்த கல்லடா ஆறுதான் தென்மலை நீர்தேக்கத்தை நிரப்பி 4 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு பொய்த்து போன தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையின் காரணமாக அணை முழுமையாக நிரம்பவில்லை. இந்நிலையில் அணையில் தண்ணீர் குறைந்து தற்போது 90அடி அளவு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதால் இந்த அணையில் 7.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு யூனிட்டுக்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில் ஆலப்புழை, பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்காகவும், விவசாயத் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து 3 தினங்களுக்கு 20 கன அடி நீர் திறந்துவிட கேரள மாநில அரசு உத்திரவிட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications