தூத்துக்குடியில் ஹைடெக் விபச்சாரம்: ஆந்திரா பெண்கள் மீட்பு - புரோக்கர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி புறநகர் பகுதியில் ஹைடெக் முறையில் பாலியல் தொழில் செய்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி பெண்களை மீட்டனர். புரோக்கரையும் போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி புறநகர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடிக்கடி சந்தேகம்படும் படியாக ஆண்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மீளவிட்டான் அருகே விஎம்எஸ் நகரில் தனியாக இருந்த அந்த வீட்டை திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு ஹைடெக் முறையில் பாலியல் தொழில் நடப்பது தெரிய வந்தது. அங்குள்ள அறை மற்றும் மொட்டை மாடியில் ஆண்களுடன் தங்கி இருந்த 3 பெண்கள் பிடிபட்டனர். மேலும் அந்த பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த புரோக்கர் ஒருவரும் சிக்கினார்.
புரோக்கரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வீடு முடிவைத்தானேந்தலை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் ஆந்திராவை சேர்ந்த குடும்ப பெண்கள் என்பதும் உறவினர் வீடுகளுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் சொல்விட்டு அங்கு வந்ததும் தெரிய வந்தது.
இதில் இரு பெண்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வேனும், 5 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொழிலில் ஈடுபட்டவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். புரோக்கர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications