போதையில் சசிகலா புஷ்பா அடித்தார், கணவர், மகன் பாலியல் கொடுமை செய்தனர்.. வேலைக்காரப் பெண் பரபர புகார்
தூத்துக்குடி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பானுமதி என்ற பெண் தூத்துக்குடி எஸ்.பியிடம் பாலியல் புகார் அளித்துள்ளார்.
கடந்த வாரம் டெல்லி ஏர்போர்ட்டில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை அடித்ததாக சர்ச்சையில் சிக்கினார் அதிமுகவைச் சேர்ந்த எம்பி சசிகலா புஷ்பா.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவர் விளக்கமளித்ததாகக் கூறப்பட்டது.
அடுக்கடுக்கான புகார்...
ஆனால், கடந்த திங்களன்று ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தன்னை அடித்ததாகவும், தனது பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் தனக்கும் தனது குடும்பத்தாரின் உயிருக்கும் பாதுகாப்பு தேவை என அவர் வலியுறுத்தினார்.

அதிமுகவிலிருந்து நீக்கம்...
இதற்கிடையே, சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கி ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக சசிகலா புஷ்பாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாலியல் புகார்...
இந்நிலையில், சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகன் மீது அவர்களது சென்னை மற்றும் தூத்துக்குடி வீட்டில் வேலை பார்த்த பானுமதி என்ற பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

எஸ்பியிடம் மனு...
தூத்துக்குடி எஸ்.பியிடம் பானுமதி தனது சகோதரி ஜான்சிராணியுடன் சென்று அளித்த புகார் மனுவில், ‘சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்த போது தனக்கு பாலியல் தொல்லை தரப்பட்டதாகவும், சசிகலா புஷ்பாவும் மதுபோதையில் தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும்' குற்றம் சாட்டியுள்ளார்.

நடவடிக்கை தேவை...
மேலும் இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும்படியும் தனது மனுவில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தவிர சசிகலா புஷ்பா மீது நெல்லையிலும் பணமோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications