எடப்பாடி பழனிச்சாமி வீட்டை முற்றுகையிட முயற்சி - மாணவர் அமைப்பினர் கைது
சென்னையில் முதல்வர் பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னையில் முதல்வர் பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
நீர் தேர்வுக்கு எதிராக போராடிய அனிதா, மருத்துவ கனவு கலைந்து போனதால் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வரின் வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதேபோல நளினி சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு இளைஞர் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வழக்கறிஞர் நளினி வீட்டை முற்றுகையிட்ட தமிழ்நாடு இளைஞர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
நீட் தேர்வு ஆதரவாக மாணவர்களுக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் வழக்கறிஞர் நளினி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications