For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய அணியை கேவலப்படுத்திய அர்னாப்: ட்விட்டரில் வெளுத்து வாங்கிய ரசிகர்கள்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் போட்டியிலேயே வெளியேறிய அணிகள் இருக்க 7 போட்டிகளில் பட்டையை கிளப்பி அரையிறுதி வரை சென்று வெற்றிகரமான தோல்வியை தழுவிய இந்திய அணிக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு போகவில்லை என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் இதயம் நொறுங்கி போயிருக்க, ‘டைம்ஸ் நவ்' சேனலோ வழக்கம் போல தன்னுடைய காட்டுக்கத்தலை ஆரம்பித்தது. அதுவும் எப்படி? ஷேம்டின் சிட்னி என்று ஹேஷ் டேக் போட்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக பேச ஆட்களை கூப்பிட்டு வம்பளந்தது.

ரசிகர்கள் தொடுத்த போர்

வழக்கம்போல அர்னாப் கோஸ்வாமி அலப்பறையை ஆரம்பிக்க ரசிகர்களோ ட்விட்டரில் எதிர் தாக்குதலை தொடர்ந்தனர். அதுவும் எப்படி #ShameOnTimesNow என்று ட்விட்டரில் போட்ட ஹேஷ் டேக் போட்டனர்.

லட்சக்கணக்கான ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவாகவும், டைம்ஸ்நவ்விற்கு எதிராகவும் போட்ட இந்த ஹேஸ் டேக்தான் டிரெண்ட் ஆக மாறியது. இரண்டு மில்லியன் மக்கள் இதற்கு சப்போர்ட் செய்தனர்.

வெட்கமாக இல்லையா

அர்னாப் உனக்கு வெட்கமாக இல்லையா? பேட் பிடிக்க தெரியாத நீயெல்லாம் பாடம் நடத்த வரலாமா? மன்னிப்பு கேள் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

டைம்ஸ் நவ்விற்கு எதிரான போர்

இந்தியாவிற்கு எதிராக பேசுவது இதழியல் தர்மமா என்று கேட்டு தாக்கியுள்ளார் நம்பூதிரி என்ற வலைஞர். ஒருவரோ, நான் மூன்று வருடமாக ட்விட்டர் பக்கம் போகவில்லை. டைம்ஸ் நவ் சேனலுக்கு எதிரான போரில் பங்கேற்க மீண்டும் ட்விட்டருக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

யாரும் ஃபாலோ பண்ணாதீங்க

இந்திய தேசிய ஹீரோக்களை டைம்ஸ் நவ் அசிங்கப்படுத்துகிறது. இது இதழியல் தர்மம் அல்ல... டைம் நவ் சேனலை யாரும் ஃபாலோ பண்ணாதீங்க என்று தாக்கியுள்ளனர் பெரும்பாலான வலைஞர்கள்.

கன்னத்தில் விழுந்த அறை

இந்திய வீரர்களுக்கு எதிராக போட்ட ஹேஷ் டேக்கிற்கு எதிராக அவர்களின் கன்னத்தில் அறைந்துள்ளனர் ரசிகர்கள்.

 டெலிட் செய்த டைம்ஸ் நவ்

டெலிட் செய்த டைம்ஸ் நவ்

இப்படி மாற்றி போட்டு ஆள் ஆளுக்கு போட்டு டைம்ஸ்நவ் சேனலையும் போட்டு தாக்கவே அலறி துடித்த டைம்ஸ் நவ் சேனல் வரிசையாக திட்டிக் குவிக்கும் ட்வீட்களை அழித்து வருகிறது.

English summary
One of the country's leading English news channels Times Now began tweeting out as well as flashing on its television screen the hashtag #ShamedinSydney, people did not take kindly to it and things quickly backfired.Netizens slammed the news channel on Twitter for their hashtag questioning team India, making the hashtag #ShameOnTimesNow trend worldwide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X