Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊஞ்சல் சங்கிலியில் தொங்கிய கிராம உதவியாளர்.. வெறும் 80 ஃபார்ம் நிரப்பிய கள்ளக்குறிச்சி பெண் பிஎல்ஓ?

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி BLO ஜாகிதா பேகம் தற்கொலையானது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. உரிய கால அவகாசமும் பயிற்சியும் தரப்படாமல் அரசு ஊழியர்களை நெருக்கடியில் தள்ளி தேர்தல் ஆணையம் அவசர கதியில் இந்த நடைமுறையை தீவிரப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

SIR எனப்படும் வாக்காளர் சிறப்பு திருத்த தீவிரப் பணி நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன.. எனவே, அது தொடர்பான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Kallakurichi Female Village Assistant BLO Village Officer

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.. திருக்கோவிலூர் அருகே உள்ளது சந்தைப்பேட்டை.. இங்கு வசித்து வரும் தம்பதி முபாரக் - ஜாகிதா பேகம்.. இதில் ஜாகிதா பேகத்துக்கு 37 வயதாகிறது..

கள்ளக்குறிச்சி - கிராம உதவியாளர்

இந்த தம்பதிக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்... சிவனார்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் ஜாகிதா பேகம்.

தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்குதல், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெறுதல் உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.

ஊஞ்சல் சங்கிலியில்

அந்தவகையில், நேற்று முன்தினமும் ஜாகிதா பேகம் வழக்கம்போல் பணிக்கு சென்றார்... பிறகு வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து விட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தார்... அப்போது வீட்டில் யாரும் இல்லை என தெரிகிறது. அந்த நேரத்தில் ஜாகிதா பேகம், வீட்டிலுள்ள ஊஞ்சல் சங்கிலியில் தூக்குப்போட்டு கொண்டார்.

சிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த அவருடைய உறவினர் காதர்பீ, ஜாகிதா பேகம் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்... உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜாகிதா பேகத்தை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.. ஆனால், ஜாகிதா பேகத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்

இதையடுத்து ஜாகிதா பேகத்தின் சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிறகு ஜாகிதா பேகத்தின் கணவர் முபாரக், திருக்கோவிலூர் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரில், "என்னுடைய மனைவியின் இறப்புக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிச்சுமை தான் காரணம். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

சார் - பணிச்சுமை

போலீசாரும் இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.. உண்மையிலேயே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிச்சுமை காரணமாக ஜாகிதா பேகம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.

ஜாகிதா பேதம் உயிரிழந்த தகவலை கேட்டதுமே, திருக்கோவிலூர் வட்டாட்சியர், மற்றும் வருவாய்த்துறையினர், விரைந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை சொன்னார்கள்..

கிராம உதவியாளர் ஜாகிதா பேகம்

இந்த நிலையில் கிராம உதவியாளர் ஜாகிதா பேகத்தின் சாவுக்கு நீதி கேட்டு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, ஜாகிதா பேகத்தின் சாவுக்கு காரணம் பணிச்சுமையே என்று கடுமையாக சாடியுள்ளனர்.

SIR பணிகள் தொடங்கிய நாளில் இருந்தே வேலை அழுத்தத்தால் ஜாகிதா பேகம் கடுமையான மன உளைச்சலில் இருந்தாராம்.. அதாவது 800 படிவங்கள் முடிக்க வேண்டிய நிலையில் வெறும் 80 படிவங்களுக்கான வேலைகளை மட்டுமே ஜாகிதா பேகம் முடித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஜாகிதா பேகத்தை அதிகாரிகள் அவசரப்படுத்தினார்களாம்.. அதிகாரிகள் மட்டுமின்றி, அந்த பகுதி அரசியல் கட்சி நிர்வாகிகள் கண்டித்ததாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன..

2 குழந்தைகள்

ஏற்கனவே தேர்தல் பணியை மேற்கொண்ட நாள் முதலே ஜாகிதா பேகம் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், ஒருகட்டத்தில் பணிச்சுமையை தாங்கி கொள்ள முடியாமல் இப்படியொரு முடிவை எடுத்து விட்டதாகவும், அவரது 2 குழந்தைகளும் நிர்க்கதியாய் நிற்கின்றனதே" என்று கண்ணீருடன் கூறுகிறார்கள் அவரது உறவினர்கள்..

4 நாட்களுக்கு முன்பு, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த கடும் பணிச்சுமையாலும், ஆபாச வசைமொழிகளாலும் கும்பகோணத்தில் அங்கன்வாடி ஊழியர் சித்ரா அவர்கள் தூக்க மாத்திரை உள்ளிட்ட பல்வேறு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற செய்தி பெரும் பரபரப்பை தந்த நிலையில், கள்ளக்குறிச்சி ஜாதிகா பேகம் மரணம் அதற்கு மேல் பேரதிர்ச்சியை உண்டு பண்ணி வருகிறது.

அவசர கதி தேர்தல் ஆணையம்

"இரண்டு குழந்தைகளை உடைய தங்கை ஜாகிதா பேகம் மரணத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். திருத்தப் பணியை புறக்கணிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தர மறுப்பதன் மூலம், இருமடங்கு கூடுதல் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இன்னும் எத்தனை அரசு ஊழியர்கள் உயிரிழக்க திமுக அரசு காரணமாகப்போகிறது? " என்று நாம் தமிழர் கட்சி சீமான் கண்டித்து பேசியிருக்கிறார்.

உரிய கால அவகாசமும் பயிற்சியும் தரப்படாமல் அரசு ஊழியர்களை நெருக்கடியில் தள்ளி தேர்தல் ஆணையம் அவசர கதியில் இந்த நடைமுறையை தீவிரப்படுத்திவிட்டதாக நாடு முழுவதுமே சலசலப்புகள் நிலவி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியில் இருக்கும் பிரச்சனைகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+