காதலை ஏற்க மறுத்தவளை கத்தியால் குத்திக்கொன்றேன்.. கொலையாளி அசால்ட் வாக்குமூலம்
சேலம்: என்னுடைய காதலை ஏற்க மறுத்துவிட்டாள்.... என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டாள்... எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன்... என்று சேலம் அருகே ப்ளஸ் டூ பள்ளி மாணவியை கொலை செய்த கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான்.
கொலையான மாணவியின் பெயர் தாரணி(17) என்பதாகும். இவர் சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ரவியின் மகளாவார். ரவிக்கு தாரணி தவிர கவுசல்யா (12) என்ற மகளும், கோவிந்தராஜ் (14) என்ற மகனும் உள்ளனர். தாரணி, வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார்.

இவர்களின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த லோகநாதனுக்கு (22) மாணவி தாரணி மீது ஒரு கண் இருந்தது. மாணவியை ஒருதலையாக காதலித்தான் லோகநாதன். ஆனால் இந்த காதலை தாரணி ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.
வழக்கம் போல நேற்று பெற்றோர்களிடம் கூறிவிட்டு பள்ளிக்கு சென்றாள் தாரணி. தோழிகளிடம் சிரித்து பேசியபடி மாலையில் பள்ளியில் இருந்து திரும்பிய தாரணிக்கு அதுதான் கடைசி சிரிப்பு என்பது தெரியாமலேயே போய்விட்டது. எமன் லோகநாதன் வடிவில் வழியில் காத்திருப்பது தெரியாமலேயே வீடு திரும்பினாள் தாரணி.
வழியில், காத்திருந்த லோகநாதன், தாரணியின் கையைப் பிடித்து வம்பு செய்துள்ளான். திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளான் லோகநாதன். ஆனால், அதற்கு தாரணி மீண்டும் மறுக்கவே, ஆத்திரமடைந்த லோகநாதன், மறைத்து வந்திருந்த கத்தியை எடுத்து குத்தினான்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அலறியபடி ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த தாரணியை கீழே விட்டு விட்டு தப்பி ஓடினான் லோகநாதன். தாரணியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள் தாரணி.
கொலையாளி கைது
இந்த சம்பவம் பற்றி தாரணியின் பெற்றோர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, சேலம் மாவட்ட எஸ்.பி தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார், நடத்திய தேடுதல் வேட்டையில் தலைமறைவாக இருந்த லோகநாதன் சிக்கினான். அவனை இன்று கைது செய்த போலீசார், அவனிடம் இருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர். லோகநாதன் மீது கொலை, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொன்றது ஏன்?‘
மாணவியை கொன்றது ஏன் என்பது பற்றி வாக்குமூலம் அளித்த லோகநாதன், நான் தாரணியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறேன். ஆனால் தாரணி என்னை காதலிக்கவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன் தாரணியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டேன். ஆனால் தாரணியின் பெற்றோர், எனக்கு தாரணியை தர மறுத்துவிட்டனர். தாரணியிடம் கூறியும் அவளும் ஏற்க மறுத்துவிட்டாள். எனவேதான் எனக்கு கிடைக்காதவள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற கோபத்தில் குத்திக்கொன்றேன் என்று அசால்டாக கூறியுள்ளான். காதலிக்க மறுத்த மாணவியை கூலித்தொழிலாளி ஒருவன் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications