மு.க. ஸ்டாலினிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற சிம்லா முத்து சோழன்!
தமது பிறந்த நாளையொட்டி இன்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் சிம்லா முத்து சோழன்.
சென்னை: தமது பிறந்த நாளையொட்டி திமுக மகளிர் அணி பிரசார குழு செயலாளர் வழக்கறிஞர் சிம்லா முத்துசோழன் இன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
மறைந்த முன்னாள் அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலராக இருந்தவருமான எஸ்.பி. சற்குணத்தின் மருமகள் சிம்லா முத்து சோழன். கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆர்கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலிலும் தமக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார் சிம்லா முத்துசோழன். ஆனால் திமுக தலைமை, பத்திரிகையாளர் மருது கணேஷை வேட்பாளராக அறிவித்தது.

இருப்பினும் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தலில் சிம்லா முத்து சோழனும் பிரசாரம் செய்தார். இதனிடையே சிம்லா முத்துச் சோழன் தமது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில், தம்முடைய பிறந்த நாளை முன்னிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினின் மனைவி துர்காவையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் சிம்லா முத்து சோழன். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் திமுகவினர் பலரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
