For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"காப்பர் T".. போய்ட்டாளே திவ்யா.. "ரமணா" படம் மாதிரியே.. டாக்டர்கள் சீரியஸா ஓடுனாங்களே.. கதறிய கணவர்

தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் புகார் தந்துள்ளனர்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது, உயிரிழந்த பெண்ணின் கணவர், பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலாவட்டம் என்ற பகுதி... இங்கு வசித்து வருபவர்கள் ஜானகிராமன் - திவ்யா தம்பதியினர்... திவ்யாவுக்கு 26 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

எனவே, சிகிச்சையின் மூலம் கருத்தடை சாதனம் (காப்பர் T) பொருத்தியிருந்தார்.. கர்ப்பத்தை தடுக்கும் பாதுகாப்பான சாதனம் மற்றும் பயனுள்ள முறை என்பதால், அரசே இதனை பொருத்திக்கொள்ள பரிந்துரை செய்கிறது.. தற்காலிகமாக கருத்தரிப்பதை நிறுத்த மட்டுமே இந்த காப்பர் டி பயன்படுகிறது. அந்தவகையில், திவ்யாவும் இதை பொருத்தி இருந்தார்..

ரோட்டில் போட்டு அடி.. உள்ளே நைட்டியில் தொங்கிய பெண் உடல்.. வீடியோவை பார்த்தால் ஷாக்.. கலங்கிய கடலூர் ரோட்டில் போட்டு அடி.. உள்ளே நைட்டியில் தொங்கிய பெண் உடல்.. வீடியோவை பார்த்தால் ஷாக்.. கலங்கிய கடலூர்

 காப்பர் T

காப்பர் T

இந்நிலையில், பொருத்தப்பட்ட சாதனத்தை அகற்றி கொள்ள திவ்யா முடிவெடுத்தார்.. இதற்காக, நேற்று காலை, மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் திவ்யா அனுமதிக்கப்பட்டார்.. அதன்படி, காலை 7.00 மணிக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு திவ்யா அழைத்து செல்லப்பட்டார். ஆனால், காலை 11.00 மணியாகியும், திவ்யாவுக்கு ஆபரேஷன் முடிந்ததா என்று எந்த தகவலும் குடும்பத்தாருக்கு தரப்படவில்லையாம்.. திவ்யாவுக்கு சிகிச்சை தருவதாக டாக்டர்கள் பரபரப்பாக காணப்பட்டதால், உறவினர்கள் பயந்துபோனார்கள்.. பிறகு, சந்தேகமடைந்து என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்கள்.

 நெஞ்சுவலி

நெஞ்சுவலி

இதற்கு டாக்டர்கள் முறையான பதிலை தரவில்லை என தெரிகிறது.. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த உறவினர்கள், திவ்யாவுக்கு என்ன நடந்தது என்று கேட்டு டாக்டர்களிடம் தகராறு செய்தனர்.. அப்போதுதான், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு திவ்யா இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னார்கள்.. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமுமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து, உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.. தவறான சிகிச்சை தந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக போலீசாரிடம் அவர்கள் கதறி அழுதனர்..

 காப்பர் - டி

காப்பர் - டி

அதேபோல, மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் புகார் பறந்தது.. உறவினர்களின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி தந்துள்ளனர்.. அத்துடன் மாவட்ட சுகாதார துறை சார்பில் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.. நடந்த சம்பவம் குறித்து உயிரிழந்த திவ்யாவின் கணவர் ஜானகிராமன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஏற்கனவே எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.. அதனால் இன்னொரு குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்பதால் காப்பர் -டி-யை, திவ்யாவுக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனை டாக்டர் சத்தியப்பிரியா பொருத்தினார்.. ஆனால், அதை அவர் முறையாக வைக்கவில்லை..

 விஜயகாந்த் ரமணா

விஜயகாந்த் ரமணா

அதனால் உடல்நலத்தில் நிறைய பிரச்சனைகள் வந்துவிட்டன.. காப்பர் -டியை, வெளியே எடுத்துவிடலாம் என்பதற்காகத்தான், இங்கே வந்தோம்.. காலையிலேயே அட்மிட் பண்ணிடோம்.. 11 மணி ஆகியும் ஒரு தகவலும் எங்களுக்கு சொல்லல.. என்ன நடந்தது என்று கேட்டதற்கு ஒன்னுமில்ல, ஒன்னுமில்லன்னு "ரமணா" படத்தில் வர்ற மாதிரியே 2 டாக்டர்கள் சீரியஸ் காட்டினாங்க.. கடைசியில பிணமாகத்தான் என் திவ்யாவை காட்டினாங்க" என்று கதறி அழுதார்.. இந்த சம்பவம் மதுராந்தகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 ரமணா விஜயகாந்த்

ரமணா விஜயகாந்த்

திவ்யாவுக்கு திருமணம் ஆகி 2 வருடங்களே ஆன நிலையில், மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் கருத்தடை சாதனம் பொருத்தி பயன்படுத்தி வந்துள்ளார்.. ஆனால், அவ்வாறு பொருத்தப்பட்டதில் இருந்தே உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், எனவேதான், சின்ன கொளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில், அந்த கருத்தடை சாதனத்தை அகற்றுவதற்காக அணுகியதாகவும் சொல்கிறார்கள். காலை 10 மணிக்கு சிகிச்சை நடந்துள்ள நிலையில், 12 மணிக்கு திவ்யா உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் குடும்பத்தாருக்கு தகவல் சொன்னார்களாம். பொருத்தப்பட்ட அந்த காப்பர் T-யை, குறிப்பிட்ட நாளில்தான் அகற்றப்பட வேண்டுமாம்.. ஆனால், பணத்துக்கு ஆசைப்பட்டு, முன்கூட்டியே டாக்டர்கள் அட்மிட் செய்துவிட்டதாகவும், அதனாலேயே திவ்யா உயிர் போய்விட்டதாகவும் உறவினர்கள் மேலும் குற்றம் சாட்டுகிறார்கள்.

English summary
Shocking and young woman dies alleged mysteriously at private hospital in chengalpattu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X