பல லட்சம் பணம், புதிய கார், காருக்குள் உல்லாசம், வாரி வழங்கிய நடிகை.. கள்ளக்காதலன் கொலையில் திடுக்!
நடிகை விஷ்ணுபிரியா கள்ளக்காதலன் கொலை விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: நடிகை விஷ்ணுபிரியா கள்ளக்காதலன் கொலை விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா - ஜோதிகா நடித்த மாயாவி படத்தில் ஒரு பாடலில் மாற்றுத்திறனாளியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. இவருக்கு திருமணமாகி ரமேஷ்கிருஷ்ணன் என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
விஷ்ணுபிரியாவின் தந்தை சூரிய நாராயணன் ஹைதராபாத்தில் மிகப்பெரிய தொழிலதிபர் ஆவார். இவருக்கு கொடைக்கானலில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு பங்களா மற்றும் தோட்டங்கள் உள்ளன.

சொகுசு பங்களாவில் சிகிச்சை
இந்நிலையில் விஷ்ணுபிரியாவின் கணவர் ரமேஷ் கிருஷ்ணன் மதுவுக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கொடைக்கானலில் உள்ள சொகுசு பங்களாவில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

வாடகை காரில் கொடைக்கானல்
இதற்காக விஷ்ணுபிரியா அவ்வப்போது கணவரை பார்க்க சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்வது வழக்கம். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் விஷ்ணுபிரியா அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்வாராம்.

முதல் சந்திப்பிலேயே
அப்படி செல்லும்போது அறிமுகமானவர்தான் கார் டிரைவர் பிரபாகரன். முதல் சந்திப்பிலேயே பிரபாகரன் பேச்சினால் கவரப்பட்ட விஷ்ணுபிரியா அவரது போன் நம்பரை பெற்றுக்கொண்டார்.

பழக்கம் நெருக்கமானது
அப்போது முதல் எப்போது கொடைக்கானல் சென்றாலும் பிரபாகரனை பிக்அப் செய்ய அழைத்துள்ளார் விஷ்ணுபிரியா. இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நெருக்கமானது.

பரிசுப்பொருட்கள்
ஒரு கட்டத்தில் பிரபாகரனை சந்திப்பதற்காகவே கொடைக்கானல் சென்றுள்ளார் விஷ்ணுபிரியா. போகும்போதெல்லாம் சென்னையில் இருந்து பிரபாகரனுக்கு ஆடைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

அடிக்கடி உல்லாசம்
சொகுசு பங்களா இருந்தபோதும் அதில் தங்காமல் நட்சத்திர ஹோட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கினர். மேலும் காருக்குள்ளேயே அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.

புதிய கார்
கொடைக்கானல் ஓட்டலில் தங்கி இருந்த போது பல லட்சம் ரூபாயை விஷ்ணுபிரியாவிடம் இருந்து பிரபாகரன் பெற்றார். ஒரு முறை பிரபாகரனின் கார் பழுது ஏற்படவே புதிய கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார் விஷ்ணுபிரியா.

சமாதானப்படுத்திய தந்தை
இதைத்தொடர்ந்து பிரபாகரனை 2-வது திருமணம் செய்ய முடிவு செய்த விஷ்ணுபிரியா தனது தந்தையிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த சூரிய நாராயணன் சிறிது நாட்கள் பொறுமையாக இருக்கும்படி விஷ்ணுபிரியாவை சமாதானப்படுத்தியுள்ளார்.

தீர்த்துக்கட்ட முடிவு
ஆனால் அப்போதே பிரபாகரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சூரிய நாராயணன், கொடைக்கானல் பங்களாவில் வேலை செய்யும் ஆட்களை வைத்து கொலை செய்யுமாறு கூறியுள்ளார். இதற்காக 4 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் பேசியுள்ளார் சூரியநாராயணன்.

மிளகாய்ப்பொடி தூவி
இதைத்தொடர்ந்து பிரபாகரனை அழைத்துச் சென்ற அந்த கும்பல் காருக்குள் கழுத்தை அறுத்து கொலை செய்து 500 அடி பள்ளத்தில் வீசிச் சென்றுள்ளனர். தாங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க காருக்குள்ளும் கொலை செய்யப்பட்ட இடத்திலும் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

ஹைதராபாத் விரைவு?
ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி செந்தில்குமார் உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் சூரிய நாரயணனை பிடிக்க தனிப்படை போலீசார் ஹைதராபாத் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications