டெய்லி நிர்வாண மசாஜ்- 2 கணவர்கள்- அமைச்சருடன் குடி கும்மாளம்: சசிகலா புஷ்பா மீது இளம்பெண்கள் புகார்
சென்னை: நாள்தோறும் நிர்வாண மசாஜ் செய்துவிட வேண்டும் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா தங்களை கொடுமைப்படுத்தியதாக அவரது வீடுகளில் பணிபுரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இளம்பெண்கள் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் அதிரவைக்கும் படுபயங்கரமான புகார்களைத் தெரிவித்துள்ளனர்.
அதிமுக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த சசிகலா புஷ்பா, திமுக எம்பி திருச்சி சிவாவை டெல்லி விமான நிலையத்தில் சரமாரியாகத் தாக்கினார். இது தொடர்பாக சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா விசாரணை நடத்தினார்.
இதன்பின்னர் ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா, ஜெயலலிதா தம்மை அடித்ததாகவும் தாம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மிரட்டுவதாகவும் பகிரங்கமாக புகார் கூறினார். இதனால் அதிமுகவில் இருந்து அதிரடியாக அவர் நீக்கப்பட்டார்.

பாலியல் சித்ரவதை
இதனைத் தொடர்ந்து சசிகலா புகார் மீது ஏகப்பட்ட புகார்கள் அடுக்கடுக்காக போலீசில் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் சென்னை, தூத்துக்குடி வீடுகளில் வேலை பார்த்து வந்த பானுமதி, ஜான்சிராணி ஆகிய இளம்பெண்கள் தூத்துக்குடி எஸ்.பி.யிடம் இன்று தங்களை குடிபோதையில் சசிகலா புஷ்பா துன்புறுத்தினார்; அவரது கணவரும் மகனும் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தனர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தனர்.

டெய்லி நிர்வாண மசாஜ்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் சசிகலா புஷ்பா தொடர்பாக அதிரவைக்கும் படுபயங்கரமான புகார்களைத் தெர்வித்தனர். இருவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சசிகலா புஷ்பா தினமும் டிரெஸ்ஸை எல்லாம் கழற்றிப்போட்டுதான் தூங்குவாங்க...அப்ப நாங்க மசாஜ்பண்ணிவிட்டுகிட்டே இருக்கனும்... ஒரு ஜெயிலுக்குள் இருந்த மாதிரிதான் இருந்தோம்.

என்னைப் போல அட்ஜெஸ்ட் செய்
அவங்க பையன் ரொம்ப தப்பாவெல்லாம் முயற்சி பண்ணியிருக்கார்... அவங்க கிட்ட போய் ஏக்கா உங்க பையன் இப்படியெல்லாம் பண்றான்னு சொன்னா, நானும் 18 வயசில அப்படிதான் அட்ஜெஸ்ட் பண்ணி போனேன்.. நீயும் அப்படி அட்ஜெஸ்ட் பண்ணி போயேன்னு சொல்வாங்க.

மாதவிடாய் கழிவுகளை அகற்றினோம்..
இந்த சித்ரவதைகள் சென்னையிலும் தூத்துக்குடியிலும் நடந்தது. ரொம்பவும் டார்ச்சர் செய்தாங்க... சசிகலா புஷ்பாவுடன் பிலால்னு ஒருத்தர் இருக்கிறார்...அவரும் சேர்ந்து ரொம்ப டார்ச்சர் செய்தாங்க... அப்பதான் நாங்க தூங்க போவோம்... உடனே பிலால் எந்திரி...எந்திரி.. அக்காவுக்கு கால் அமுக்கு, கையை அமுக்குன்னு சொல்வாங்க... மாதவிடாய் கழிவுகளைக் கூடா நாங்கதான் அகற்றனும்...

கும்மாளம் போட்ட கல்வி அமைச்சர்
கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வருவார்...அவர் வந்த உடனே எங்களை வெளியே நிக்க சொல்லுவாங்க... அப்புறம் பெட்ரூமுக்குள்ள போயிடுவாங்க... அவங்களுக்கு சாப்பாடு, டிரங்ஸ் எல்லாம் எடுத்து வைப்போம்.. அவங்க குடிச்சுட்டு கும்மாளம் போட்டு அலைவாங்க... சென்னை, தூத்துக்குடி வீடுகளுக்கு பழனியப்பன் வந்திருக்கிறார்...

பிலாலுக்கும் மனைவி சசிகலா புஷ்பாதான்...
சசிகலா புஷ்பாவுக்கு பிலால் தாலி கட்டினது உண்மைதான். அவங்க கூடதான் இருப்பாங்க... இதுபற்றி சசிகலாவின் முதல் கணவரான லிங்கேஸ்வரா கேட்டால், இது என் தனிப்பட்ட விவகாரம்னு சொல்லிடுவாங்க சசிகலா புஷ்பா.... அவரு லிங்கேஸ்வராவும் சரியானவரு இல்லை...

தற்கொலை முயற்சி
நாங்க மாடியில் போய் தற்கொலை செய்து கொள்ள இருந்தோம்... அவங்க நடத்துகிற ஹாஸ்டல் சமையல்காரங்கதான் எங்களை தடுத்து காப்பாத்தானுங்க...

தோசைக்கல்லில் முட்ட வைத்து சித்ரவதை
தோசைக்கல்லில் தோசை சுட்டுகிட்டோ முட்டையை போட்டுகிட்டோ இருப்போம்..அப்ப சசிகலா புஷ்பா தோசைக்கல்லில் எங்க தலையை அப்படியே முட்ட வைப்பாங்க.... நாங்க இந்த மாதம்தான் வேலையைவிட்டு நின்றிருக்கிறோம்.
தண்டனை அவசியம் தேவை..
அவங்களுக்கு சரியான தண்டனை கொடுக்கனும்... எங்களை மாதிரி வாழ்க்கை மற்ற பெண்களுக்கு வரவே கூடாது என்னு எஸ்பியிடம் மனு கொடுத்திருக்கிறோம்.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications