நல்லவேளை போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள வந்து திருடல!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சந்தைப்பேட்டை கிராமத்தில் காவல்நிலையம் அருகே உள்ள மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பட்டிபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா. தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு கீரமங்கலம் சந்தைப் பேட்டையில் பல ஆண்டுகளாக மளிகை கடை உள்ளது.

நேற்று இரவு கடையை சாத்திவிட்டு சென்று இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் மேல் இருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் உடைக்கப்பட்டு இருந்தது. கடையை திறந்து பார்த்த போது முதல் நாள் மளிகை பொருட்கள் விற்ற பணம் ரூபாய் 20 ஆயிரத்தை காணவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஜீவா போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்ற போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதி எப்போது மக்கள் நடமாட்டம் உள்ள பிரதான பகுதி. மேலும் கீரமங்கலம் போலீசார் இரவு ரோந்து பணியிலும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் காவல் நிலையம் அருகில் இருந்த கடையில் கடையை உடைத்து திருட்டு நடந்திருப்பது அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications