பொருள் வாங்க வந்த பெண்ணிடம் சில்மிஷம்... மளிகை கடைக்காரர் கைது
சென்னை: சென்னையில் பொருள் வாங்க கடைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த மளிகை கடைக்காரரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாமபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி சங்கீதா (19).
அதே தெருவில் மளிகைக் கடை நடத்தி வருபவர் அப்துல்ஜாபர் (42).

சம்பவத்தன்று சங்கீதா பொருட்கள் வாங்க அபதுல் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது சங்கீதாவின் கையைப் பிடித்து இழுத்து அப்துல் சில்மிஷம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கணவர் வெங்கடேசனிடம், சங்கீதா புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரும் கடைக்குச் சென்று அப்துலிடம் இது தொடர்பாக விசாரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.
இது தொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்ததன் பேரில், தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பொருள் வாங்கச் சென்ற தன்னிடம் சில்மிஷம் செய்ததாக அப்துல் மீது போலீசில் புகார் அளித்தார் சங்கீதா. அந்தப் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பரங்கிமலை துணை கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வன்கொடுமை சட்டத்தில் மளிகை கடைகாரர் அப்துல் ஜாபரை போலீசார் கைது செய்தனர். பின்னர், தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் செய்து அப்துல் ஜாபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications