தொடர் பதற்றத்தில் தூத்துக்குடி... இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு
தமிழகம் முழுவதும் இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
Recommended Video

சென்னை: தூத்துக்குடியில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை மூட கோரி ஆட்சியர் வெங்கடேஷிடம் மனு அளிக்க பல்லாயிரக்கணக்கானோர் பேரணியாக சென்ற போது அவர்களை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்ற வித்தியாசம் ஏதும் பார்க்காமல் குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த படுகொலையை காணும் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் 2-ஆவது நாளாக நேற்று மீண்டும் துப்பாக்கிச் சூடும் , தடியடியும் நடத்தப்பட்டது. மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு வணிகர் சங்கம் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் வெளியிட்டார். அதன்படி இன்று காலை முதல் கடைகள் மூடப்பட்டு கிடந்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications