தென்காசி-நெல்லைக்கு போதிய பஸ் வசதி இல்லை.. படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவிகள் ஆபத்தான பயணம்
நெல்லை தென்காசி இடையே உரிய பேருந்து வசதி இல்லை என ஆலங்குளத்தில் கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை: தென்காசி - நெல்லை வழித்தடத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் கல்லூரி மாணவிகள் தினம்தோறும் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மாணவிகளின் பஸ் பாஸ்களை ஏற்றுக்கொள்ளும் பேருந்துகள் வெறும் இரண்டு மட்டுமே கல்லூரி நேரத்தில் இயக்கப்படுவதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்க வேண்டி இருப்பதாக மாணவிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். இதனிடையே இன்று ஆலங்குளத்தில் கல்லூரி மாணவிகள் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி விவசாய தொழில்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாகும். அதுபோக குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களும் உள்ளது.
தென்காசி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் அதாவது ஆலங்குளம் போன்ற பகுதியை சேர்ந்தவர்கள் தொழில் நிமித்தமாகவும் வேலை, மருத்துவம் பல்வேறு தேவைகளுக்காகவும் நெல்லை நகருக்கு அடிக்கடி பயணப்படுவதுண்டு.

4 வழிச்சாலை அமைக்கும் பணி
இதனால், தென்காசி - திருநெல்வேலி சாலை எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக இயங்கும் சாலைகளில் ஒன்றாக உள்ளது. தற்போது இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. பல மாதங்களாக இந்தப் பணிகள் நடைபெற்று வந்தாலும் இன்னும் பெரும்பாலான பணிகள் முடிவடையாமல் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணிக்கும் நிலையே உள்ளது. விரைவில் இந்த சாலைப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் ஒரு கோரிக்கையாக இருந்து வருகிறது.

சாதாரண கட்டண பேருந்துகள் குறைவு
இதற்கு மத்தியில், நெல்லை - தென்காசி இடையே இயக்கப்படும் பேருந்துகளும் போதிய அளவில் இயக்கப்படுவது இல்லை என்ற ஆதங்கமும் பயணிகள் மத்தியில் உள்ளது. குறிப்பாக எல்.எஸ்.எஸ், ஒன் டூ ஒன் போன்ற பேருந்துகள் இயக்கப்படுவதால் சாதாரண கட்டண பேருந்துகள் அதிகம் இயக்கப்படுவதில்லை என்பதும் பயணிகள் கருத்தாக இருக்கிறது. குறிப்பாக உரிய பேருந்து வசதியின்றி கல்லூரி மாணவிகள் கடும் இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதாக
பிசியான ரூட்டாக அறியப்படும் ஆலங்குளம்- திருநெல்வேலி சாலையில் கல்லூரி மாணவிகளின் பஸ் பாஸ்களை ஏற்றுக்கொள்ளும் பேருந்துகள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. ஆலங்குளம் பகுதியில் இருந்து திருநெல்வேலியில் உள்ள ராணி அண்ணா கல்லூரிக்கு கல்வி பயில செல்லும் மாணவிகள் இதனால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கல்லூரி நேரங்களில் வெறும் மாணவிகளின் பஸ் பாஸ்களை ஏற்றுக்கொள்ளும் சாதாரண பேருந்துகள் வெறும் 2 மட்டுமே இயக்கப்படுவதாக மாணவிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.

கல்லூரி மாணவிகள் வேதனை
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மாணவிகள் வேறு வழியின்றி படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் சூழலே நிலவுகிறது. தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் கல்லூரிக்கு சென்று வருவதாக மாணவிகள் வேதனையுடன் கூறுகின்றனர். பெரும்பாலும் பீடி சுற்றும் தொழில் மற்றும் விவசாய கூலி தொழிலில் ஈடுபடும் மக்களால் தங்கள் பிள்ளைகள் கல்லூரிக்கு சென்று வர இந்த பேருந்துகளையே நம்பியிருக்கின்றனர்.

படிக்கட்டுகளில் தொங்கியபடி
ஏனெனில், எல்.எஸ்.எஸ் போன்ற பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ. 25 பயண கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், வேறு வழியின்றி படிக்கட்டுகளில் தொங்கியபடிதான் செல்ல வேண்டியிருப்பதாக மாணவிகளும் பெற்றோர்களும் கூறுகின்றனர். பல ஆண்டுகளாகவே இதே நிலைதான் நீடிப்பதாகவும் கல்லூரிக்கு தாமதாக சென்றால் வெளியில் நிற்க வைத்து கல்லூரி நிர்வாகம் 10 திருக்குறள் அல்லது பழமொழிகள் எழுத வைத்த பிறகே உள்ளே அனுமதிப்பதாகவும் மாணவிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவிகள் சாலை மறியல்
இதற்கிடையே இன்டேர்னல் தேர்வு இருந்ததால் உரிய பேருந்து வசதி இல்லை எனக்கூறி இன்று ஆலங்குளத்தில் கல்லூரி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மாணவிகளுக்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. நாள் தோறும் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கும் நிலைதான் இருப்பதாகவும் பேருந்திற்குள் நிற்பதற்கு இடம் கிடைத்தாலே பெரிய விஷயம் என சொல்லும் அளவுக்கு கூட்டம் அதிகமாக இருப்பதால், மாணவிகள் பயணிப்பற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று ராணி அண்ணா கல்லூரி மாணவிகள் என கோரிக்கை விடுத்தனர். மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பீக் நேரங்களில் இந்த வழித்தடத்தில் அதிக பேருந்துகளை இயக்க வெண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications