சென்னையில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்த 2 திருடர்களை விரட்டிப் பிடித்த எஸ்.ஐ.
சென்னை: சென்னையில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்தவர்களை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் துரத்திப் பிடித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள மேற்கு மாதா கோவில் தெருவில் வசித்து வருபவர் சரண்யா(22). எம்.எஸ்.கோவில் தெருவில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

அவரின் வீடு உள்ள தெருவில் அவர் நடந்து செல்கையில் அவரை 2 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாததை உணர்ந்த அவர்கள் சரண்யாவின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதை பார்த்து சரண்யா உதவி கேட்டு கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக வந்த ராயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் அந்த 2 கொள்ளையர்களை துரத்திச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்தார்.
விசாரணையில் அவர்கள் காசிமேட்டைச் சேர்ந்த பூபாலன்(23), சக்திவேல்(24) என்பது தெரிய வந்தது. ஜெயராம் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த சரண்யாவின் செல்போனை பறிமுதல் செய்தார்.
அந்த 2 பேரும் வேறு எங்காவது செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருக்கிறார்களா என்று விசாரணை நடந்து வருகிறது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications