உள்வாங்கியது திருச்செந்தூர் கடற்கரை! பாசி படிந்த பாறையில் வெள்ளை உருவம்! தியானம் செய்ததால் பரபரப்பு
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 3ஆவது நாளாக கடல் சீற்றம் காணப்பட்டு கடல் உள்வாங்கிய நிலையில் அங்கு பாசிபடிந்த பாறையில் சித்தர் ஒருவர் தியானம் செய்த காட்சி சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.
முருகனின் 2ஆம் படைவீடாக திகழ்வது திருச்செந்தூர். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும் அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கடல் நீர் உள்வாங்கும்.

அப்போது பாசிகள் எல்லாம் தெரியும். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள், பொதுமக்கள் அந்த பகுதியில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தி அனுப்பி வைப்பர்.
இதையடுத்து பின்னர் சிறிது நேரத்தில் அது சரியாகிவிடும். இது போல் ஒவ்வொரு மாதமும் நிகழும். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி பவுர்ணமியையொட்டி கடல் நீர் உள்வாங்கியது. பிறகு மீண்டும் கடந்த 14 ஆம் தேதி சுமார் 60 அடிக்கு கடல் உடல்வாங்கியது.
இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னர் மாலை நேரத்தில் கடல்நீர் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோயிலுக்கு வந்த பக்தர்கள் அச்சமில்லாமல் கோயிலில் குளித்து முருகனை தரிசித்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம், 17ஆம் தேதியும் கடல் உள்வாங்கியது. அப்போது பாசி தெரிந்தது. இதையடுத்து பொதுமக்களை அங்கிருந்த காவலர்கள் குளிக்க வேண்டாம் என கூறி அறிவுறுத்தியிருந்தனர்.
அப்போது திருச்செந்தூரில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அங்கு உடல் முழுவதும் விபூதி பூசியிருந்த சித்தர் ஒருவர் பாசி படர்ந்த கல்லில் அமர்ந்து தியானம் செய்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாகவே திருச்செந்தூரில் நம் கண்களுக்கு தெரியாத சித்தர்கள், ஞானிகள் தியானம் செய்வார்கள் என்கிறார்கள். அதை பார்க்க முடியாவிட்டாலும் உணர முடியும்.
ஆனால் தற்போது இவர் சம்மணம் இட்டு இரு கண்களையும் மூடிக் கொண்டு தியானம் செய்வது பார்ப்போரை பக்தி பரவசம் அடைய வைத்தது. திருச்செந்தூருக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
திருச்செந்தூருக்கு சினிமா பிரபலங்களும் வருகிறார்கள். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலின் முன்பு உள்ள கடற்கரையில் புனிதநீராடிவிட்டு அருகே உள்ள நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு முருகனை தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் கடலில் அடிக்கடி உள்வாங்கும் சம்பவம் நடப்பதால் ஏராளமான சிலைகளும் கல்வெட்டுகளும் அடித்துக் கொண்டு வெளியே வருகிறது. இது போல் ஒரு முருகனின் சிலையும் கரை ஒதுங்கியது. இதை பக்தர்கள் பார்த்து ஹரோகரா கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications