ரூ. 9 லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட 20 கிலோ வெள்ளி விநாயகர்: 22ம் தேதி கடலில் போட முடிவு
சென்னை: சென்னையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரூ 9 லட்சம் செலவில் 20கிலோ எடையில் உருவாக்கப்பட்ட வெள்ளி பிள்ளையாரை வரும் 22ம் தேதி கடலில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப் பட்டது. அன்றைய தினம், வீடுகள் மற்றும் பொது இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளைக் களிமண்ணால் செய்துவைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு பிரகாஷ்ராவ் காலனியில் சிவ சேனா அமைப்பு சார்பில் ரூ 9 லட்சம் செலவில், சுமார் 20கிலோ எடையில் வெள்ளியில் பிள்ளையார் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
மற்ற களிமண் சிலைகளைப் போலவே, இந்த வெள்ளி பிள்ளையாரையும் கடலில் போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சிவசேனா மாநில அமைப்பாளர் கலைவாணன் கூறுகையில், ‘வரும், 14ம் தேதி, வரை விநாயகர் சிலை பொதுமக்களின் தரிசனத்துக்கு வைக்கப்படும். அன்று மாலை, காசிமேட்டில், கடலில் படகு மூலம் 10 கி.மீ., தூரம் சென்று சிலை, கடலில் போடப்படும். அதற்காக, போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
இந்த விநாயகருக்கு வினை தீர்க்கும் விநாயகர் என, பெயர் வைத்துள்ளோம். எங்கள் பகுதி மக்களின் நலனுக்காக, யாகம் செய்து, ரூ.9 லட்சம் செலவழித்து வெள்ளியில் தயாரித்த விநாயகரை கடலில் விடுகிறோம். அது யாருக்கு கிடைத்தாலும் அது அவருக்கு கடவுள் கொடுத்த வரம் என்று தான் நாங்கள் கருதுவோம்' எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications