For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸார் மீது நடந்த தாக்குதலில் உடன்பாடு இல்லை: சிம்பு

ஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று சிம்பு தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மன்சூர் அலிகான் ஏன் சிறையில் அடைக்கப்பட்டார்..சிம்பு கேள்வி-வீடியோ

    சென்னை: ஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டனத்துக்குரியது என்று சிம்பு தெரிவித்தார்.

    காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டன. இதனிடையே தமிழர்களை ஆத்திரமூட்டும் முயற்சியாக கடந்த 10-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டன.

    இதற்கு நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சியினர், பாரதிரைாஜா தலைமையிலான தமிழ் ஆர்வலர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி அண்ணா சாலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர்.

    போராட்டம் நடத்த வரவில்லை

    போராட்டம் நடத்த வரவில்லை

    அப்போது போலீஸார் மீது மர்மநபர்கள் சிலர் கடும் தாக்குதல் நடத்திய வீடியோ அதிர வைத்தது. இதுகுறித்து நடிகர் சிம்பு கூறுகையில், எல்லாருக்கும் வணக்கம், தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் எனது வணக்கம். சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு போராட்டம் நடத்துவதற்காக நாங்கள் வரவில்லை.

    மன்சூர் அலிகான்

    மன்சூர் அலிகான்

    காவிரி போராட்டம் நடத்திய அனைவரையும் போலீஸார் கைது செய்து விடுதலை செய்தனர். அதற்கு முன்னதாக சீமான், பாரதிராஜா உள்ளிட்டோரை விடுவிக்காமல் அவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து அங்கு மன்சூர் அலிகான் வந்து போராட்டம் நடத்தியதால் அவரை தற்போது கைது செய்து வைத்துள்ளனர்.

    உடன்பாடு இல்லை

    உடன்பாடு இல்லை

    எந்த அடிப்படையில் மன்சூரை கைது செய்தது எதற்கு என தெரியவில்லை. போலீஸார் அவர் கடமையை செய்கின்றனர். நாம் போலீஸாருக்கு எதிரானவர்கள் கிடையாது. ஐபிஎல் போராட்டத்தின் போது நடந்த பிரச்சினையை வன்முறை என்று சிலர் கூறியுள்ளனர். ஆனால் காக்கி சீருடை அணிந்திருக்கும் நம்மை பாதுகாக்கும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதில் எனக்கு உடன்பாடு இல்லை.

    போலீஸார் மீது தாக்குதல்

    போலீஸார் மீது தாக்குதல்

    ஆனால் அதற்கு முன்னாடி என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. போலீஸார் நினைத்திருந்தால் தாக்குதல் நடத்திய நபரை எப்படி வேண்டுமானாலும் தாக்கியிருக்கலாம். ஆனால் அந்த நபர் காவிரி உரிமைக்காக போராடுகிறார் என்பதே உணர்ந்தே அந்த போலீஸ்காரர் அடி வாங்கியுள்ளார் என நான் நினைக்கிறேன்.

    காரணம் தெரிய வேண்டும்

    காரணம் தெரிய வேண்டும்

    கடந்த வாரம் பல்லாவரத்தில் கைது செய்யப்பட்டிருந்த பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோரை விடுவிக்குமாறு தான் சிறுநீரக கல் நீக்க ஆபரேஷன் மேற்கண்டிருந்தபோதிலும் மருத்துவ சிகிச்சை டுயூப்களை எடுத்து போட்டு விட்டு போராட்டம் நடத்தியுள்ளார். அவரை 7 நாட்களாக வைத்திருக்க காரணம் என்ன என கேட்டு வந்துள்ளேன் என்றார் சிம்பு.

    English summary
    Actor Simbu says that its very wron incident that the unknown gang attacks policemen in Anti IPL protest in Chennai. He also says that Whatever it is, policemen would not have been attacked.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X