நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு நாளை பகல் 12.30 மணிக்கு இறுதிச்சடங்கு

நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு நாளை பகல் 12.30 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஸ்ரீதேவியின் உடலுக்கு எம்பாமிங் | Oneindia Tamil

    சென்னை: ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வு தற்போது நிறைவடைந்தது. அவரது உடல் விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டு நாளை பகல் 12.30 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பினால் மரணமடைந்தார். 54 வயதாகும் ஸ்ரீதேவி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    Sir Devi's body will be taken to Mumbai by special flight

    இதுகுறித்து பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள். அதே போல் சக நடிகர்கள், நடிகைகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் இவரது உடல் துபாயில் பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்படும்.

    ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ் மாலை 3 மணிக்கு மருத்துவமனையில் இருந்து பெறப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்னமும் உடல்கூறு ஆய்வு அறிக்கை அளிக்கப்படவில்லை. தற்போது உடற்கூறு ஆய்வு முடிவடைந்தது.

    இதுகுறித்து துபாய் தடயவியல் துறை அதிகாரிகள் கூறுகையில் ஸ்ரீதேவி முக்கியமான நபர் என்பதால் அவருக்கு விரிவான உடற்கூறு சோதனை நடைபெற்றது. அதனால் உடற்கூறு செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த சோதனை முடிந்ததால் முகைசானா என்ற இடத்தில் உள்ள ஆய்வகத்தில் அவரது உடல் பதப்படுத்தப்படும். பதப்படுத்தப்பட்டு நிர்வாக நடைமுறைகளுக்கு பின்னர் ஸ்ரீதேவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் தெரிவித்தனர்.

    அவரது உடல் நாளை தனிவிமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் திரையுலகினர், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று தெரிகிறது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக துபாயில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இதனிடையே நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு நாளை பகல் 12.30 மணிக்கு மும்பையில் உள்ளது அவரது இல்லத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மும்பையில் நாளை காலை 9 மணி முதல் 11.30 மணி வரை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+