மனசைச் சுடுகிறது இந்தப் படம்..!
சென்னை: மனிதம், மனித நேயம், பந்தம், பாசம் எல்லாமே இன்று பொய்யாகிப் போய் விட்டது அல்லது மரித்துப் போய் விட்டது. வர்த்தகமயமாகி விட்ட உலகில் எதற்குமே மதிப்பும் இல்லை மரியாதையும் இல்லை என்பதை அன்றாடம் நடக்கும் பல நிகழ்வுகள் நமக்கு உணர்த்திக் கொண்டே உள்ளன.
மனிதம் மரித்துப் போனதன் உச்சத்தை ஒட்டுமொத்த தேசமும் நேற்று பார்த்து அதிர்ந்து போய் நிற்கிறது. மருத்துவமனையில் மரித்துப் போனது தனது மனைவியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் சொல்ல கையில் காசும் இல்லாமல், வாகனமும் கிடைக்காமல் தோளில் போட்டுத் தூக்கிச் சென்ற கணவர், தங்களது இயாலாமையை நினைத்துக் கதறி அழுதபடி உடன் நடந்து வந்த மகள்.. ரத்தம் கொதிக்கிறது அந்தக் காட்சியைப் பார்க்கும்போது.

நாடு சுதந்திரமடைந்து என்ன பயன், சாதனைகள் படைத்து என்ன பயன், உலக அரங்கில் வல்லரசாகப் போகிறோம் என்று கூறிக் கொள்வதில் என்ன பயன்.. ஊர் ஊராகச் சுற்றும் நாட்டின் தலைவரும் சரி, அந்த சாதனை படைத்து விட்டோம், இந்த சாதனை படைத்து விட்டோம் என்று சொல்லும் தலைவர்களும் சரி வெட்கப்பட வேண்டும்...!
ஒடிஷாவில் நடந்த இந்த கொடுமையான சம்பவத்தை வைத்து சிராஜ் காசிம் என்பவர் நெற்றிப் பொட்டில் அடித்தது போல ஒரு படம் வரைந்துள்ளார். இந்தியா என்று அதற்குப் பெயரும் இட்டுள்ளார்.
மனசைச் சுடுகிறது இந்தப் படம்...!












Click it and Unblock the Notifications