தண்ணீரின்றி கருகிய சிறுகிழங்குகள்: விவசாயிகள் கண்ணீர்
நெல்லை: நெல்லை அருகே போதிய தண்ணீர் இல்லாததால் சிறுகிழங்குகள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
நெல்லை மாவட்ட பகுதியான கடையத்தில் ராம நதி, கடனா நதி ஆகிய இரண்டு அணைகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தென்மேற்கு பருவமழையை நம்பி முழுமையாக நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை இருப்பதால் ஆங்காங்கே சிறு கிழங்கு பயிரிடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த பகுதிகளில் பாசன வசதி பெறும் கடையம், ஆழ்வார்குறிச்சி, கோவிந்தபேரி, பிள்ளைகுளம், ராவணசமுத்திரம், வீரராகவபுரம், பெத்தன்பிள்ளை குடியிருப்பு, சிவசைலம், பாப்பான்குளம் உள்ளிட்ட இடங்களில் ஆயிரம் ஏக்கர் நிலங்களில் சிறுகிழங்கு பயிர் செய்யப்பட்டது. தென் மேற்கு பருவ மழை பொய்த்ததால் அணைகள் தண்ணீரின்றி வறண்டன. இதனால் அணையை நம்பி பயிரிடப்பட்ட சிறு கிழங்கு பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கின.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சிறு கிழங்கு பயிரின் ஆயுட்காலம் 6 மாதம் ஆகும். நான்கு மாத காலம் தண்ணீர் பாய்ச்சியும், காட்டு பன்றிகளிடம் இருந்தும் பயிர்களை காப்பாற்றி வந்தோம். தற்போது கடுமையான வறட்சி நிலவி வருவதால் சிறு கிழங்கு செடிகள் போதிய தண்ணீரின்றி கருகி வருகின்றன. இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யக் கூடிய நிலையில் பயிர்களை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. வயல்களில் உள்ள கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டது. இதனால் தண்ணீர் இன்றி எங்களை போன்ற விவசாயிகள் கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications