சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழகம் மீதான அக்கறையிலா? வைகோ விளக்கத்தை பாருங்கள்
கேரளாவின் சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே, அட்டபாடி பகுதியில் அகழி மற்றும் சோலையூர் பஞ்சாயத்தில் ரூ.1000 கோடி மதிப்பில் 450 மீட்டர் நீளம், 51.5 மீட்டர் உயரத்தில் அணை கட்டி, ஆண்டுக்கு 4.5 டி.எம்.சி. நீரை கேரளப் பகுதிக்குள் திருப்பிவிட திட்டமிட்டுள்ளது. இங்கு அணைகட்டுவது தொடர்பாக ஆய்வுசெய்ய, மத்திய அரசின் நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் திட்ட மதிப்பீட்டு வல்லுநர் குழு அனுமதியும் அளித்திருந்தது.

அதன் தொடர்ச்சியாக அணை கட்டும் பணியை கேரளா தொடங்கியது. இதனால் தமிழகத்தின் கொங்குமண்டலப் பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. போராட்டங்களும் நடத்தப்பட்டன. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதமும் எழுதினார். மேலும், சிறுவாணி அணை பிரச்சனை தொடர்பாக சட்டசபையில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த சூழ்நிலையில், சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட மத்திய அரசு தடைவிதித்தது. அட்டப்பாடியில் கேரளா அணை கட்டும் திட்டத்தை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அப்போது அவர், 'சிறுவாணி அணைக்கு மத்திய அரசு தடை விதித்தது தமிழக மக்களின் மீதான அக்கறையினால் அல்ல. தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவே மத்திய அரசு தடை விதித்துள்ளது' என்றார்.
மேலும், 3 தொகுதி தேர்தல் குறித்து பேசிய வைகோ, 'இந்தத் தேர்தல்களில் மக்கள் நலக்கூட்டணி யாருக்கும்ஆதரவு அளிக்காது. புறக்கணிப்பு என்பதே தேர்தலில் பங்கெடுக்கவில்லை என்றுதான் அர்த்தம்' எனக் கூறினார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications