மொடக்குறிச்சி அருகே நாயை காப்பாற்ற முயன்ற அக்கா-தம்பி காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
நாயை காப்பாற்ற முயன்ற 2 பேர் காவிரி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
Recommended Video

ஈரோடு: நாயை காப்பாற்ற போய் அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி செல்வி. இர்வகள் கட்டிட தொழிலாளிகள். இவர்களுக்கு குமரேசன் 28, சிலம்பரசன் 22 என்ற இரு மகன்களும், சத்யா 25, ஜெகதீஸ்வரி 24, காஞ்சனாதேவி 21 என 3 மகள்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால், இவர்கள் அனைவரும் தங்கள் நண்பர்கள் 6 பேருடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் மொடக்குறிச்சியை அடுத்துள்ள காங்கயம்பாளையம் நட்டாஸ்வரர் கோயில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது தங்கள் வீட்டில் வளர்ந்த நாயையும் அழைத்து சென்றனர். குளத்தில் குளிக்க செல்லும்முன் அனைவரும் கோவிலில் சாமி கும்பிட்டனர்.
பின்னர் அனைவரும் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடன் வந்த நாய் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. நீரில் நாய் தத்தளித்ததை கண்ட சிலம்பரசனும், ஜெகதீஸ்வரியும் நாயினை கரைக்கு தள்ளி விட்டனர். ஆனால் இவர்கள் இருவரும் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டனர். இதனை கவனித்த உடனிருந்தவர்கள் அவர்களை இருவரையும் கடுமையாக மீட்க முயன்றும் முடியவில்லை.
உடனடியாக மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் ததகவல் அளித்தனர். விரைந்த வந்த அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிலம்பரசன் மற்றும் ஜெகதீஸ்வரியை இறந்த நிலையில் மீட்டனர். அவர்களது சடலங்களை பார்த்து சகோதர, சகோதரிகள், மற்றும் உடன்வந்த நண்பர்கள் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications