உண்ணாவிரதத்தை மீண்டும் கையிலெடுத்த அரவிந்தர் ஆசிரம சகோதரிகள்
புதுச்சேரி: மூன்று பேரின் தற்கொலைக்குக் காரணமான அரவிந்தர் ஆசிரமத்தின் மீது புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உயிர் பிழைத்த சகோதரிகள் மீண்டும் தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கியிருக்கின்றனர்.
புதுவை அரவிந்தர் ஆசிரமத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாத் சாந்திதேவி தம்பதியினர் தங்கி சேவை செய்து வந்தனர். இவர்களின் மகள்கள் ராஜஸ்ரீ, அருணாஸ்ரீ, ஜெயஸ்ரீ, நிவேதிதா, ஹேமலதா ஆகியோரும் ஆசிரமத்தில் தங்கி சேவை செய்து வந்தனர். இவர்கள் ஆசிரமத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்தனர். ஆசிரம நிர்வாகத்தின் மீது இந்த சகோதரிகள் பாலியல் புகார் கூறினர்.

இதனால் ஆசிரம நிர்வாகம் விடுதியை காலிசெய்துவிட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது. ஆனால் சகோதரிகள் விடுதியை காலிசெய்ய மறுத்து ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. இறுதியில் ஆசிரமத்தைவிட்டு சகோதரிகள் வெளியேற கோர்ட் 6 மாத காலக்கெடு விதித்தது. இந்த காலக்கெடு முடிந்த பிறகும் சகோதரிகள் விடுதியில் இருந்தனர். இதனால் போலீசார் உதவியுடன் ஆசிரம நிர்வாகம் சகோதரிகளை விடுதியிலிருந்து வெளியேற்றியது.
இதனால் மனமுடைந்த சகோதரிகள் பெற்றோருடன் கடந்த ஆண்டு டிசம்பரில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் தாயார் சாந்திதேவி, ராஜஸ்ரீ, அருணாஸ்ரீ ஆகியோர் கடலில் மூழ்கி இறந்தனர். பிரசாத், சகோதரிகள் நிவேதிதா, ஜெயஸ்ரீ, ஹேமலதா ஆகிய 4 பேர் மீட்கப்பட்டனர். இந்த தற்கொலை சம்பவத்தின்போது அவர்களை அப்பகுதியை சேர்ந்த 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் ஜெயஸ்ரீ காப்பகத்தில் தங்கியுள்ளார். பிரசாத், ஹேமலதா, நிவேதிதா ஆகியோர் புதுச்சேரி கேன்டின் வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய ஆசிரமம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய மனித உரிமைகள் ஆணையம், புதுவை போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர். போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் ஆசிரமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சகோதரிகளுக்கு உணவு, உடை, தங்குமிடம் ஆகியவற்றை தருவதாக புதுவை அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை அரசு சார்பில் எந்த உதவியும் அளிக்கப்படவில்லை. இதை கண்டித்தும், ஆசிரம நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சகோதரிகள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தலைமை தபால் நிலையம் முன்பு ஆசிரம சகோதரிகள் நிவேதிதா, ஹேமலதா ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக போராட்டத்தை தொடங்கியுள்ளனர். போராட்டத்துக்கு சமூக அமைப்புகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. திராவிடர் கழகம் சிவவீரமணி, எஸ்.ஆர்.காங்கிரஸ் ராம மூர்த்தி, தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி, மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், வாழ்வுரிமை இயக்க தலைவர் ஜெகநாதன், நுகர்வோர் பாதுகாப்பு கழக தலைவர் முருகானந்தம், மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன், தமிழ் தமிழர் இயக்கம் பிரதாப், திராவிடர் விடுதலைக்கழகம் கோகுல்காந்திநாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆசிரம சகோதரிகள் எந்த அனுமதியும் போலீசாரிடம் பெறவில்லை. இருப்பினும் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும் போலீசார் நட வடிக்கை எடுக்கவில்லை. இதனால் அங்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தையொட்டி தலைமை தபால் நிலையம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஹேமலதா கூறும்போது, "ஆசிரம நிர்வாகிகள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு தந்து நடவடிக்கை இல்லை. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண் டும். ஆசிரமத்தில் மீண்டும் தங்க வைத்து எங்களுக்கு உணவு, உடை வசதிகளை செய்து தர வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கியுள்ளேன்.
புதுச்சேரி அரசு மற்றும் மத்திய அரசிடம் பலமுறை புகார் மனு தந்தும் நடவடிக்கை இல்லை. மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. மத்திய அரசும் ஆசிரம நிர்வாகி களுக்கு ஆதரவாக செயல் படுகிறது. யாருமே எங்க ளுக்கு உதவாததால் நான் இப்போராட்டத்தை தொடங்கியுள்ளேன்" என்று தெரிவித்தார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications