சிவகங்கை சிறுமி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்... அத்தை தலைமறைவு- உயரதிகாரிகள் கைது எப்போது?
மதுரை: சிவகங்கையில் பள்ளிச் சிறுமி பலத்காரம் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போலீசில் புகார் அளித்த அத்தை செல்வி மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை மதுபோதைக்கு அடிமையாக்கி சீரழித்தது அத்தைதான் என்றும் தன் மீது பழி வராமல் இருக்க சிறுமியின் தந்தை, சகோதரன் மீது பழி சுமத்தி அவர்களை கைது செய்ய வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
சிவகங்கையைச் சேர்ந்த சிறுமியை, தாத்தா, தந்தை, சகோதரன் தந்தையின் நண்பர்கள், அண்ணனின் நண்பர்கள், வழக்கறிஞர், போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள், மளிகைக்கடை உரிமையாளர், மதுரையில் உள்ள பிரபல ஹார்ட்வேர் கடையின் உரிமையாளர், ஹோட்டல் முதலாளி என 28 பேர் 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் தாத்தா, தந்தை, அண்ணன், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை உயரதிகாரிகள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய அதிகாரிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் அண்ணன் கார்த்திக், தனது தங்கையின் நிலைக்கு அத்தை செல்விதான் காரணம் என்று கூறியுள்ளார். என் தந்தை, ராஜஸ்தானில் மத்திய காவல் துறையில் பணிபுரிந்தார். அப்போது நானும், என் தங்கையும் அங்கே இருந்தோம். என் அம்மா இறந்த பிறகு, என் தங்கையை தாத்தா வீட்டில் விட்டோம். நான், பெங்களூரில் அத்தை வீட்டில் இருந்தேன். என் தங்கையை அத்தை செல்வியின் பொறுப்பில் விட்டோம். என் அத்தைதான் என் தங்கையை சீரழித்துள்ளார். என் அத்தை செல்வி மீது புகார் கொடுக்க முயன்றேன். அதனால்தான் அவர், என் தங்கையை வைத்து என் மீதும், என் அப்பா மீதும் புகார் கொடுக்க வைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

சீரழித்த அத்தை
சிறுமியின் அத்தை செல்விக்கு எஸ்.ஐ. சங்கருடன் தகாத உறவு இருந்துள்ளது. செல்விதான் எஸ்.ஐ சங்கரிடம் சிறுமியை கூட்டிச்சென்றுள்ளார். மதுரை பசுமலையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் வைத்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து, குரூப்பாக பலாத்காரம் செய்துள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள்
தென்மாவட்ட போலீஸ் ஐ.ஜி அலுவலகத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமாரின் போட்டோவை அந்தச் சிறுமி அடையாளம் காட்டியிருக்கிறார். இவர்தான், என்னை பல நாட்களாக பாலியல் வல்லுறவு கொண்டார். பிறகு வேறு பலரிடமும் என்னை கூட்டிச் சென்று பலவந்தமாக பாலியல் உறவுகொள்ள வைத்தார். அவர்களில் சிலர் போலீஸ் உயரதிகாரிகள் என்று சிறுமி திவ்யா சொல்லியிருக்கிறார். அவர்களில் மூன்று பேர் ஐ.பி.எஸ் அதிகாரிகள். அவர்களின் அந்தரங்க அடையாளங்களையும் அந்தச் சிறுமி குறிப்பிட்டு இருக்கிறார்.

கரு கலைத்த டாக்டர்கள்
சிறுமி திவ்யா தன்னுடைய வாக்குமூலத்தில், இருமுறை தனக்கு கர்ப்பம் கலைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 16 வயது பெண்ணுக்கு முறையான அனுமதி இல்லாமல் கர்ப்பத்தைக் கலைத்தது சட்டப்படி குற்றம் என்பதால், திவ்யாவுக்கு கருக்கலைப்பு செய்த மருத்துவர்களை கைதுசெய்யவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தலைமறைவான அத்தை
அத்தை செல்விதான், சிறுமியை பலருக்கும் அழைத்துச் சென்று முறைகேட்டுக்கு உட்படுத்தி உள்ளார். காவல் நிலையத்துக்குக் கூட்டிச் சென்று புகார் கொடுத்தவரும் செல்விதான். கடந்த வாரத்தில் இருந்து செல்வி தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

சி.பி.ஐ விசாரணை வேண்டும்!
உயர் போலீஸ் அதிகாரிகளே குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதால், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications