சிவகாசி போராட்டம் வாபஸ்: வடபோச்சே… கலங்கும் வேட்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

சிவகாசி: மத்திய அரசை கண்டித்து சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்கள் நடத்திய போரராட்டம் திரும்ப பெறப்பட்டது.

பட்டாசு ஆலை உரிமக்கட்டணம், சேமிப்புகிடங்கு கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கடந்த 6-ம் தேதி முதல் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

செவ்வாய்கிழமையன்று உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில் சிவகாசியில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தொழிலாளர்களின் நலன் கருதி போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

மத்திய அரசு ஏப்ரல் 21-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வர அழைப்பு விடுத்துள்ளது. அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் புதிய அரசிடம் முறையிடுவோம் என்றும், புதிய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூனில் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் பட்டாசு ஆலை அதிபர்கள் சங்கத் தலைவர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.

வாக்கு அறுவடைக்கு

பட்டாசு தொழிலாளர்களின் போராட்டத்தை மையமாக வைத்து விருதுநகர் தொகுதியில் வாக்குகளை அறுவடை செய்துவிடலாம் என வேட்பாளர்கள் என நினைத்திருந்தனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தவிர அனைத்து வேட்பாளர்களும் பட்டாசு உற்பத்தியாளர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இப்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டு விட்டதால் வட போச்சே என்று புலம்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+