மடத்திலேயே பாலியல் தொல்லை.. அதுவும் 2 சிறுவர்களுக்கு! போக்சோவில் கள்ளக்குறிச்சி சிவனடியார் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோவில் மடத்தில் தங்கி சிவனடியாராக இருந்த இளைஞர் 2 சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் அவரை போலீசார் போக்சோவில் அதிரடியாக கைது செய்து நிலையில் சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாசார் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர்.

இந்த கோவிலில் சிவனடியாராக சிவபாலன் (வயது 31) என்பவர் தொண்டாற்றி வருகிறார். இவர் கோவில் மடத்திலேயே தங்கியிருந்தார். இவருடன் 2 சிறுவர்கள் தங்கியிருந்தனர்.
இவர்களுக்கு 18 வயது இன்னும் நிரம்பவில்லை. பள்ளி பயிலும் இவர்கள் சிவபாலனுடன் மடத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில் தான் சிவபாலன் இரவு நேரத்தில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சம்பவம் குறித்து வெளியே கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இதனால் சிறுவர்கள் பயந்துபோய் சம்பவம் குறித்து வெளியே கூறாமல் இருந்துள்ளனர்.
இதனை சிவபாலன் சாதகமாக பயன்படுத்தி உள்ளார். இந்நிலையில் தான் மனம் வெறுத்த 2 சிறுவர்களும் சம்பவம் குறித்து பள்ளியில் உள்ள புகார் பெட்டியில் எழுதி போட்டுள்ளனர். இதுபற்றி அறிந்த பள்ளி நிர்வாகம் போலீசில் புகார் செய்தது. மேலும் சிறுவர்கள் தரப்பிலும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது சிவனடியார் சிவபாலன் சிறுவனிடம் அத்துமீறியது தெரியவந்தது. இதையடுத்து சிவபாலனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த மடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications