For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூன்றாவது நாளாய் இன்றும் சென்னையை நனைத்த பனி... விமான போக்குவரத்து பாதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் காலை 7 மணியைத் தாண்டி கடுமையான பனி மூட்டம் காணப்பட்டதால் 3 ஆவது நாளாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெங்களூரிலும் பனி மூட்டம் ஏற்பட்டதால் 4 விமானங்கள் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன. காலை 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்கவோ, கிளம்பிச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டது.

Six flights diverted, delayed due to fog at Chennai airport

சென்னையில் இருந்து புனே, அந்தமான், டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம், மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 20 க்கும் மேற்பட்ட விமானங்கள் காலை 8 மணிக்கு பிறகே வானிலை சீரானதும் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்டு சென்றன.

Six flights diverted, delayed due to fog at Chennai airport

நேற்று அதிகாலையில் துபாய், சிங்கப்பூர், அபுதாபி, மஸ்கட் ஆகிய நாடுகளில் இருந்து சென்னை வந்த 4 விமானங்கள் பனி மூட்டம் காரணமாக தரை இறங்க முடியாமல் வானத்தில் வட்டமிட்டன.

Six flights diverted, delayed due to fog at Chennai airport

பின்னர் 4 விமானங்களையும் பெங்களூருக்கு திருப்பிவிட விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் முடிவு செய்து திருப்பி அனுப்பினர்.

English summary
Six flights were diverted and a few flights were delayed by two hours after fog reduced visibility to 100metres at Chennai airport on Saturday. Flight operations were affected from 3.30am to 8.30am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X