செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து திருச்சி, மதுரை, குமரிக்கு இன்று சிறப்பு ரயில்கள்
சென்னை: மழை காரணமாக, சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மூடப்பட்டதால், சென்னையின் அருகேயுள்ள அரக்கோணம், திருவள்ளூர் நகர ரயில் நிலையங்களில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சென்டிரல், எக்மோர் ரயில் நிலையங்கள் வரும் 5ம் தேதி மதியம் வரை மூடப்பட்டிருக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம் ஆகிய நகரங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
திருவள்ளூரில் இருந்து இரவு 8 மணிக்கு ஹைதராபாத்துக்கு சிறப்பு ரயில் புறப்படுகிது. அரக்கோணம், ரேணிகுண்டா, குடூர், நெல்லூர் நகரங்களில் ரயில் நின்று செல்லும்.
அரக்கோணத்தில் இருந்து மதுரைக்கு இன்று இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. காட்பாடி, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல் நகரங்களில் நின்று செல்லும்.
திருவள்ளூரில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, போத்தனூர், பாலக்காடு, எர்ணாக்குளம், திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி சென்றடையும்.
இதேபோல, நெல்லையில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும்.
அதேபோல ராமேஸ்வரத்தில் இன்று இரவு 9 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரயில், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூர் வழியாக, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இயக்கப்படும்.
இந்த சிறப்பு ரயில்கள் அனைத்துமே பாசஞ்சர் வகை ரயில்களாகும்.
சிறப்பு ரயில்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, 044-28190216 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications