சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பரிதாப பலி!
சென்னை: சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 6 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுடைய மகள் லக்ஷயா தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்புப் படித்து வந்தார்.

லக்ஷயா காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுமியின் உடல்நிலை மோசமானதால் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று காலை உயிரிழந்தார்.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:
சிறுமிக்கு எலிசா பரிசோதனை மேற்கொண்டதில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. சிறுமிக்கு ரத்தத்தில் நோய் தொற்று ஏற்பட்டு ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
அதன் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்து உள் உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.
உடல் உறுப்புகள் செயல் இழந்ததே சிறுமியின் மரணத்துக்குக் காரணம் என்று அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனை மேற்கொண்ட ரத்தப்பரிசொதனையில் அவருக்கு டெங்கு கிருமி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications