முதல்வர் ஜெயலிதாவின் டெல்லி பயணத்தை விமர்சித்த ஈவிகேஎஸ்- சரத்குமார் கண்டனம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் குறித்து ஈவிகேஎஸ் இளங்கேவன் தெரிவித்துள்ள கருத்துக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"முதல்வரின் டெல்லி பயணத்தால் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார். மத்திய அரசில் உள்ளவர்களை முதல்வர் சந்திக்காமல், மாநிலத்தின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளார் என்ற இளங்கோவன், தற்போது முதல்வரின் டெல்லி பயணம் தொடர்பாக பல்வேறு கற்பனை கதைகளாக வெளியிடுகிறார்.
தமிழகத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பொறுப்பான எதிர்க்கட்சியாக ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுவோம் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்ததை அவர்களின் தோழமைக் கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவனும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால்தான் பல திட்டங்கள் செயல்வடிவம் பெரும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தமிழக மீனவர் , இலங்கை தமிழர் , நதி நீர் பங்கீடு குறித்த நடவடிக்கைகள், கச்சதீவு எனப் பலவிதமான பிரச்னைகளுக்கு மத்திய அரசின் குறிக்கீடு தேவையாக இருக்கும்போது, முதல்வரின் பயணம் குறித்த இளங்கோவனின் கருத்து ஏற்புடையதல்ல. அது கண்டிக்கத்தக்கது"
இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications