கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை.. அலறியடித்துக்கொண்டு வெளியேறிய பயணிகள்.. நடந்தது என்ன?
பிரம்மாபூர்: அசாமில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்ட திப்ருகர் - கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென்று புகை எழுந்ததால் பயணிகள் அச்சமடைந்து ரயிலில் இருந்து அலறியடித்துக்கொண்டு இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த எஸ்க்பிரஸ் ரயில், ஒடிசாவின் பிரம்மப்பூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, திடீரென புகை கிளம்பியது. இதனால், அந்த ரயிலில் பயணித்த பயணிகள் அச்சம் அடைந்தனர்.
புகை கிளம்பியதால் ரயிலில் இருந்து அலறி அடித்துக் கொண்டு பயணிகள் கீழே இறங்கினர். தண்டவாளத்தில் இருந்த சாக்குப்பை ஒன்று ரயிலின் சக்கரத்தில் பிரேக் பகுதியில் சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட தேய்மானத்தின் காரணமாகவே புகை வந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர், பிரேக் பகுதி பரிசோதிக்கப்பட்டு, அரைமணி நேரம் கழித்து ரயில் மீண்டும் புறப்பட்டது. புகை வந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் தீ பிடிக்காமல் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தான் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் வந்து கொண்டிருந்த ரயிலில் திடீரென புகை கிளம்பியதால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications