உங்க பேரு கனிமொழியா? பேரைக் கேட்டு வாய்விட்டு சிரித்த ஸ்மிருதி இரானி
திருப்பூரில் ஒரு பெண்ணிடம் பெயரைக் கேட்ட மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அவர் கனிமொழி என்று கூறிய உடன் வாய் விட்டு சிரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்படுகிறது.
சென்னை: திருப்பூர் பின்னலாடை நிறுவனத்திற்கு வருகை தந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இராணியிடம், கோரிக்கை மனுவை பின்னலாடை தொழிற்துறையினர் வழங்கினர். அப்போது பின்னலாடை நிறுவனத்தை சுற்றுப்பார்த்த அவர், அங்கேயிருந்த ஒரு பெண்ணிடம் பெயர் என்ன என்று கேட்டார் அதற்கு அவர் கனிமொழி என்று கூறவே, உடனே சட்டென்று சிரித்தார். அவர் ஏன் சிரித்தார் என்று அங்கிருந்த யாருக்குமே முதலில் தெரியவில்லை.

பின்னலாடை தொழிலில் முன்னிலை வகிக்கும் திருப்பூரில், நேதாஜி ஆயத்த ஆடை ஜவுளிப்பூங்காவில் உள்ள பின்னலாடை நிறுவனத்திற்கு, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வருகை தந்தார். பின்னலாடை தயாரிப்புப் பணிகளை அவர் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, அனைத்து பின்னலாடை தொழில்துறையினரிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
கனிமொழி'ங்கிற பேர கேட்டா அவ்ளோ சிரிப்பாவா இருக்கு?? 🤔🤔 pic.twitter.com/4C5bRRvgGt
— டான் டான் டான் (@krajesh4u) April 27, 2017
ஜவுளித்துறை வளர்ச்சிக்காக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தொழிற்துறையினர், அமைச்சரிடம் வழங்கினர். திருப்பூரில் பின்னலாடை துறை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கவும், தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் மத்திய அமைச்சர் உறுதியளித்ததாக திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications